கெர்னீக்கா (ஓவியம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கெர்னீக்கா
Mural del Gernika.jpg
ஓவியர் பாப்லோ பிக்காசோ
ஆண்டு 1937
வகை எண்ணெய் வர்ண ஓவியம்
பரிமாணம் 349 சமீ × 776 சமீ (137.4 அங் × 305.5 அங்)
இருக்குமிடம் Museo Reina Sofia,
மத்ரித், எசுப்பானியா

கெர்னீக்கா அல்லது குவைர்னிக்கா (Guernica) எனப்படும் ஓவியம் பாப்லோ பிக்காசோவினால் வரையப்பட்டது. இது எசுப்பானிய உள்நாட்டுப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தவேளை, செருமனியினதும் இத்தாலியினதும் இராணுவப் போர் வானூர்திகள் 26 ஏப்ரல் 1937 அன்று எசுப்பானியா தேசியவாதிகளின் படைகள் மீது தென் எசுப்பானியாக் கிராமம் பசுகி மீது குண்டுத் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலாக இது உருவாக்கப்பட்டது. எசுப்பானியக் குடியரசு 1937 உலக கண்காட்சியில் எசுப்பானியாக் காட்சியாக பெரிய சுவர் ஓவியம் ஒன்றைக் காட்சிப்படுத்த பிக்காசோவினை நியமித்தது.

கெர்னீக்கா போரின் அவல நிலையையும் தனிநபர்கள் மீது குறிப்பாக அப்பாவிப் பொதுமக்கள் மீது திணிக்கப்பட்ட துன்பத்தினையும் காட்டுகின்றது. இக்கலைப்படைப்பு நினைவுச் சின்ன நிலையை அடைந்து, போரின் அவல நிலையையும் நிலையாக நினைவுபடுத்தும் ஒன்றாகவும், போர் எதிர்ப்பு அடையாளமாகவும், சமாதானத்தின் உருவமாகவும் உருவாகியது. நிறைவு பெற்ற கெர்னீக்கா உலகின் பல இடங்களுக்கு குறுகிய பயணத்தில் காட்சிப்படுத்தப்பட்டு, புகழ் பெற்றதாகவும் பரந்தளவில் பாராட்டுதலும் பெற்றது. இந்தப் பணயம் எசுப்பானிய உள்நாட்டுப் போரை உலக கவனத்திற்குக் கொண்டுவர உதவியது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கெர்னீக்கா_(ஓவியம்)&oldid=1370253" இருந்து மீள்விக்கப்பட்டது