புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வீட்டுப் புறா வகையைச் சேர்ந்த பாறைப் புறா பறக்கும் காட்சி

புறா முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினமாகும். உயிரின வகைப்பாட்டில் இது கொலம்பிடே (Columbidae) குடும்பத்தைச் சேர்ந்தது. இக்குடும்பத்தில் ஏறத்தாழ 300 வகை இனங்கள் உள்ளன. புறாக்கள் உலகெங்கிலும் உள்ளன என்றாலும், இந்தியா, மலேசியா, இந்தோனீசியா முதலிய தென்கிழக்கு ஆசியப்பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றன. புறாக்கள் பல்வேறு வேறுபட்ட அளவுகளில் காணப்படுகின்றன. நியூகினியாவைச் சேர்ந்த க்ரோண்ட் புறாக்கள் அளவில் பெரியவை. இரண்டு முதல் நான்கு கிலோ எடையுடையவை. மிகச் சிறியவை ஜெனஸ் கொலம்பினா என்ற இனத்தைச் சேர்ந்தவை ஆகும். இவை சுமார் 22 கிராம் எடை உடையவை.

பொருளடக்கம்

வாழ்க்கை [தொகு]

இது தானிய வகைகளை மட்டும் உணவாக உண்ணும் பயிறுண்ணிப் பறவை ஆகும். பறவைகளிலேயே புறா மட்டுமே தண்ணீரைத் தன் அலகால் உறிஞ்சிக் குடிக்கும் பழக்கமுடையது என்றும் சொல்லப்படுவதுண்டு. இது வீட்டிலும் செல்லப்பறவையாக வளர்க்கப்படுகிறது. வீட்டில் வளர்க்கப்படும் புறாக்கள் உருவத்தில் சிறியனவாகவும் சாதுவாகவும் காணப்படும். காட்டுப்புறாக்கள் உருவத்தில் சற்றுபெரியவை.

கூடு [தொகு]

புறாக்கள் மரங்களில் குச்சிகள் மற்றும் குப்பைகளை வைத்து கூடு கட்டுகின்றன. இவை ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் இடுகின்றன. ஆண், பெண் புறாக்கள் குஞ்சுகளை கவனித்துக்கொள்ளுகின்றன. குஞ்சுகள் 7 முதல் 27 நாட்களில் கூட்டை விட்டு வெளியே வருகின்றன.

தூது மற்றும் பந்தயம் [தொகு]

மன்னர்கள் காலத்தில் கடிதப்போக்குவரத்து மற்றும் தூது ஓலை அனுப்புவதற்கு நன்கு பயிற்சிகொடுத்துப் பழக்கப்பட்ட புறாக்களே பயன்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் இப்போதும் புறாக்களுக்கான பந்தயம் நடைபெறுகிறது. பழக்கப்பட்ட புறாக்கள் வெகுதொலைவில் கொண்டுவிடப்பட்டு அவை தங்கள் கூட்டுக்குத் திரும்பி வரும் நேரத்தை வைத்து இப்பந்தயங்கள் நடத்தப்படுகின்றன.

noicon
கோதுமை அரிசி இரண்டில், கோதுமையை மட்டும் உண்ணும்

விக்கி ஊடகக் காட்சியகம் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=புறா&oldid=1346940" இருந்து மீள்விக்கப்பட்டது