கோபி அன்னான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கோபி அன்னான்

ஏழாவது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்
In office
1 சனவரி 1997 – 31 திசம்பர் 2006
Deputy லூயிஸ் பிரேசெட்ட்(1997–2006)
மார்க் மல்லாக் பிரவுன்(2006)
Preceded by பூட்ரோஸ் பூட்ரோஸ் காலி (எகிப்து)
Succeeded by பான் கி மூன்

பிறப்பு 8 ஏப்ரல் 1938 (1938-04-08) (அகவை 75)
குமாசி
நாட்டுரிமை கானா
Spouse(s) நானா மரியா லகேர்கிரேன்
Religion கிறித்தவர்[1]

கோபி அன்னான் (பி. ஏப்ரல் 8, 1938) கானாவைச் சேர்ந்தவர். ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது செயலாளராக இருந்தவர். ஜனவரி 1, 1997 இல் இப்பதவிக்குத் தெர்ந்தெடுக்கப்பட்ட கோபி அன்னான் டிசம்பர் 31, 2006 அன்று ஓய்வு பெற்றார். வளர்ந்துவரும் நாடுகளின் மக்களைப் பராமரிப்பதற்கான உலக எயிட்ஸ் மற்றும் சுகாதார நிதியத்தை தாபித்தமைக்காக இவருக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் 2001ம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

பிறப்பும், வளர்ப்பும், கல்வியும் [தொகு]

கானாவின் குமசியின் கோபேன்ட்ரோஸ் பகுதியில் பிறந்தார். இவரும் இவரது சகோதரியும் இரட்டையர்களாவர். கானா நாட்டின் கலாசாரப்படி இரட்டையர்கள் கௌரவமாகக் கருதப்படுவர். அவரது மாமாவும் தாத்தாவும் குடியினரின் தலைவர்களாக இருந்தனர்.[2]

கானா நாட்டில் ஓர் வழக்கமாக குழந்தைகள் பிறந்த நாளினையே அவர்களுக்கு பெயராகச் சூட்டுவர். அவ்வழக்கப்படியே இவருக்கு “கோஃபி”(அதாவது வெள்ளிக்கிழமை அவர்களின் மொழியில்) என்று பெயரிட்டனர்.[3] 1954 முதல் 1957 வரை கேப் கோஸ்டிலுள்ள பள்ளியில் கல்வி பயின்றார்.[4] 1957இல் தனது பள்ளிக்கல்வியை முடித்தார். அவ்வாண்டு கானா நாட்டிற்கு ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை கிடைத்தது. இவரது இரட்டைச் சகோதரி 1991 இல் மரணமானார்.

மேடைப்பேச்சுகள் [தொகு]

மேற்கோள்கள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கோபி_அன்னான்&oldid=1344975" இருந்து மீள்விக்கப்பட்டது