யாசிர் அரஃபாத்
யாசிர் அரஃபாத் (யாசர் அராஃபத், Yasser Arafat) என்று பரவலாக அழைக்கப்படும் முகம்மது யாசிர் அப்துர் ரஹ்மான் அப்துர் ரவூப் அரஃபாத் அல்-குத்வா அல்-ஹுசைனி (ஆகஸ்டு 4 (அ) ஆகஸ்டு 24, 1929 - நவம்பர் 11, 2004) பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவராக செயலாற்றியவர். அபூ அம்மார் என்று அவரது ஆதரவாளர்களால் அழைக்கப்பட்டார். 1994 இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மூவரில் ஒருவர்.
இறப்பு [தொகு]
2004 ஆம் ஆண்டு திடீரென நோயுற்றதால் இவர் பிரான்சு நாட்டின் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட இவர் குறுகிய காலத்துக்குள்ளேயே இறந்துவிட்டார்.
நஞ்சூட்டல் [தொகு]
இவரது இறப்புத் தொடர்பாகச் சந்தேகப்படுவதற்கான காரணிகளைப் பெற்றுக்கொண்ட இவரது மனைவியின் வேண்டுகோளின் பேரில் இவரது ஆடை உட்பட இறப்பின் போது இவரிடமிருந்த பொருட்கள் 2012 இல் சுவிட்சர்லாந்து நாட்டுப் பரிசோதனைக்கூடம் ஒன்றில் வேதியியற் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டன. யாசிர் அரபாத்தின் இறப்புக்குக் காரணம் அவருக்குப் பொலோனியம்-210 நஞ்சூட்டப்பட்டிருப்பதே என்பதை அவ்வாய்வுகள் உறுதிப்படுத்தின.[1].
மேற்கோள்கள் [தொகு]