மலாலா யூசப்சையி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மலாலா யூசப்சையி
தாய்மொழியில் பெயர் ملاله یوسفزۍ
பிறப்பு 12 ஜூலை 1997 (1997-07-12) (அகவை 17)
மிங்கோரா, வடமேற்கு எல்லைப்புற மாகாணம், பாக்கித்தான்
தேசியம் பாக்கித்தானியர்
இனம் பஷ்தூன்[1]
பணி பெண்களின் உரிமைகள், கல்வி, வலைப்பதிவர்
அறியப்படுவது தாலிபானின் கொலை முயற்சி
சமயம் சுன்னி இசுலாம்
உறவினர்கள் Ziauddin Yousafzai (தந்தை)

மலாலா யோசப்சையி (ஆங்கிலம்: பாசுதூ: ملاله یوسفزۍ‎, பிறப்பு 1997) என்பவர் பாகிசுத்தான் நாட்டின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள மிங்கோரா எனும் சிற்றூரில் வசிக்கும் ஒரு மாணவி ஆவார். இவர் பெண்கள் உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளுக்காக அறியப்படுகிறார். இவர் வசிக்கும் பகுதியில் பெண்கள் பாடசாலை செல்வதற்கான தாலிபானின் தடையை மீறி இவர் பள்ளி சென்றுவந்தார். 2009இல் ஆண்டிலேயே இவரது பி.பி.சியின் உருது வலைப்பதிவு ஊடாக தானும் தனது ஊரும் பாக்கித்தானிய தாலிபானால் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட முயற்சி செய்யப்படுகிறது என்று விவரித்து வந்தார்.[2][3] இருப்பினும் புனைபெயரில் எழுதிவந்தமையால் இவரது அடையாளம் தெரியாதிருந்தது. அண்மையில் தொலைக்காட்சி நேர்முகமொன்றில் நேரடியாக தோன்றியதிலிருந்து பரவலா அறியப்பட்டதுடன் பழைமைவாத தாலிபான்களின் இலக்கிற்கும் ஆளானார். பல விருதுகளைப் பெற்ற மலாலாவிற்கு பாக்கித்தானின் முதல் அமைதிப் பரிசும் வழங்கப்பட்டது.

மலாலா அவர்களை ஒக்ரோபர் 9, 2012 அன்று தாலிபான் சுட்டுக் கொல்ல முயன்றது.[4][5] இவர் படு காயம் அடைந்தைத் தொடர்ந்து இதற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இவரைச் சுட்ட தீவிரவாதிகள் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு தரப்படும் என்று கைபர்-பாக்டுன்கவா மாநில அரசு அறிவித்துள்ளது.[6]

மலாலா யோசப்சையி

விருதுகள்[தொகு]

  • பாக்கித்தானின் முதல் அமைதிப் பரிசு
  • உலக அமைதி மற்றும் செழிப்பு அறக்கட்டளையின், "தைரியத்திற்கான விருது" (bravery award)[7][8]

மலாலா தினம் அனுசரிப்பு[தொகு]

2013 ஆம் வருடம் ஜூலை 12இல் மலாலா தனது 16ஆவது பிறந்தநாள் அவர் ஐக்கிய நாடுகள் சபை தொடர்புகொண்டு உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் கல்விகற்க வேண்டும் என்று கேடு கொண்டார் .இந்த நிகழ்வை ஐக்கிய நாடுகள் " மலாலா தினம்" என்று குறிபிட்டனர்.அவர் தாக்குதலுக்கு உள்ளன பிறகு அவர் அளித்த முதல் பேட்டிஆகும் .

சான்றுகோள்கள்[தொகு]

  1. "Malala and Sharbat Gula: Pashtun Icons of Hope". Saleem Ali. University of Queensland, Australia: National Georgraphic (14 October 2012). பார்த்த நாள் 2013-09-29.
  2. "Diary of a Pakistani schoolgirl". BBC News. 19 January 2009. http://news.bbc.co.uk/2/hi/south_asia/7834402.stm. 
  3. "Pakistani girl, 13, praised for blog under Taliban". BBC News. 24 Nov. 2011. http://www.bbc.co.uk/news/world-asia-15879282. 
  4. http://www.guardian.co.uk/world/2012/oct/09/pakistan-girl-shot-activism-swat-taliban
  5. "Taliban says it shot Pakistani teen for advocating girls’ rights". The Washington Post. October 9, 2012. http://www.washingtonpost.com/world/asia_pacific/taliban-says-it-shot-infidel-pakistani-teen-for-advocating-girls-rights/2012/10/09/29715632-1214-11e2-9a39-1f5a7f6fe945_story.html. பார்த்த நாள்: October 10, 2012. 
  6. "சிறுமியை சுட்ட தீவிரவாதிகள் பற்றி துப்பு கொடுத்தால் 1 கோடி பரிசு". அக்டோபர் 11, 2012. தினகரன். பார்த்த நாள் அக்டோபர் 11, 2012.
  7. "Pakistani teenager Malala Yousufzai chosen for bravery award Read more at: http://indiatoday.intoday.in/story/pakistani-teenager-malala-yousufzai-chosen-for-bravery-award/1/229943.html". பார்த்த நாள் நவம்பர் 20, 2012.
  8. "Malala awarded for bravery, advocacy of girl education". பார்த்த நாள் நவம்பர் 20, 2012.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மலாலா_யூசப்சையி&oldid=1666732" இருந்து மீள்விக்கப்பட்டது