1820
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 18ம் நூ - 19ம் நூ - 20ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1790கள் 1800கள் 1810கள் - 1820கள் - 1830கள் 1840கள் 1850கள் |
| ஆண்டுகள்: | 1817 1818 1819 - 1820 - 1821 1822 1823 |
| 1820 | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1820 MDCCCXX |
| திருவள்ளுவர் ஆண்டு | 1851 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2573 |
| சீன நாட்காட்டி | 4516-4517 |
| எபிரேய நாட்காட்டி | 5579-5580 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1875-1876 1742-1743 4921-4922 |
| இரானிய நாட்காட்டி | 1198-1199 |
| இசுலாமிய நாட்காட்டி | 1235 – 1236 |
| ரூனிக் நாட்காட்டி | 2070
|
1820 (MDCCCXX) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
நிகழ்வுகள்[தொகு]
- சனவரி 28 – உருசிய நாடுகாண் பயணிகள் கப்பல் மிக்கைல் லாசரெவ், பேபியன் கொட்லீப் தலைமையில் அண்டார்க்டிக்கா கரையை அடைந்தது.
- சனவரி 30 – எடுவார்ட் பார்ன்ஸ்ஃபீல்ட் அண்டார்க்ட்டிக்கா பெரும்தரையைச் சென்றடைந்தார்.
- மார்ச் 15 - ஐக்கிய அமெரிக்காவின் 23வது மாநிலமாக மேய்ன் இணைந்தது.
- ஏப்ரல் - மின்னியலுக்கும் காந்தவியலுக்கும் உள்ள தொடர்பை ஆன்சு கிருத்தியான் ஆர்ஸ்டெட் கண்டுபிடித்தார்.
- செப்டம்பர் 15 – லிஸ்பன் நகரில் புரட்சி வெடித்தது.
- அக்டோபர் 9 – குவாயாக்கில் (இன்றைய எக்குவடோரில்) நகரம் ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
தேதி அறியப்படாதவை[தொகு]
- இலங்கையில் டச்சுக்காரரினால் தடை செய்யப்பட்டிருந்த மடு மரியாள் ஆலயம் மீண்டும் மக்களின் வழிபாட்டிற்குத் திறந்து விடப்பட்டது.
- இலங்கையின் தேசாதிபதி சேர் ரொபர்ட் பிரவுன்றிக் பணி முடிந்து இங்கிலாந்து திரும்பினார். உதவி ஆளுநராக சேர் எட்வர்ட் பார்ன்ஸ் பதவியேற்றார்.