டிசம்பர் 28
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | டிசம்பர் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
| MMXIII | ||||||
டிசம்பர் 28 கிரிகோரியன் ஆண்டின் 362வது நாளாகும். நெட்டாண்டுகளில் 363வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 3 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1065 - லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலாயம் (Westminster Abbey) திறந்துவைக்கப்பட்டது.
- 1612 - கலிலியோ கலிலி நெப்டியூன் கோளைக் கண்டுபிடித்தார்.
- 1836 - தெற்கு அவுஸ்திரேலியா, அடிலெய்ட் ஆகியன அமைக்கப்பட்டன.
- 1836 - மெக்சிகோவின் விடுதலையை ஸ்பெயின் அங்கீகரித்தது.
- 1846 - அயோவா ஐக்கிய அமெரிக்காவின் 29வது மாநிலமாக இணைந்தது.
- 1867 - ஐக்கிய அமெரிக்கா மிட்வே தீவுக்கு உரிமை கோரியது.
- 1879 - ஸ்கொட்லாந்தில் டண்டீ என்ற இடத்தில் தொடருந்து மேம்பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் அதில் சென்றுகொண்டிருந்த தொடருந்து விபத்துக்குள்ளாகியதில் 75 பேர் கொல்லப்பட்டனர்.
- 1885 - இந்தியாவின் வழக்கறிஞர்கள், அறிவியலாளர்கள், ஊடகவியலாளர்கள் 72 பேர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை ஆரம்பிப்பதற்கு பம்பாயில் கூடினர்.
- 1891 - யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை சிவன் கோயிலில் பல்லாயிரக்கணக்கான ரூபாய் பெறுமதியான நகைகள் களவாடப்பட்டன.
- 1895 - பிரான்சின் லூமியேர சகோதரர்கள் பாரிஸ் நகரில் தங்கள் திரைப்படங்களை முதன்முதலாகப் பொதுமக்கள் பார்வைக்குக் கட்டணத்துடன் திரையிட்டனர்.
- 1908 - இத்தாலி, சிசிலியில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 75,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1929 - நியூசிலாந்தின் காலனித்துவ காவற்துறையினர் ஆயுதமின்றிப் போராட்டத்தில் ஈடுபட்ட சமோவாவின் 11 பேரைச் சுட்டுக் கொன்றனர். இது சமோவாவின் விடுதலை இயக்கத்துக்கு தூண்டுதலாக அமைந்தது.
- 1930 - மகாத்மா காந்தி பேச்சுவார்த்தைகளுக்காக பிரித்தானியா சென்றார்.
- 1958 - கியூபாவின் சாண்டா கிளாரா நகர் மீது சே குவேரா போர் தொடுத்தார்.
- 1981 - அமெரிக்காவின் முதலாவது சோதனைக்குழாய் குழந்தை எலிசபெத் கார் வேர்ஜீனியாவில் பிறந்தது.
- 1989 - அவுஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நியூகாசில் நகரில் இடம்பெற்ற 5.6 அளவை நிலநடுக்கம் காரணமாக 13 பேர் கொல்லப்பட்டனர்.
- 1994 - விடுதலைப் புலிகளின் உப தலைவர்களில் ஒருவரான கோபாலசாமி மகேந்திரராஜா இந்திய அமைதிப்படையுடன் இணைந்து புலிகளுக்கெதிராக சதி செய்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் அவருக்கு புலிகளால் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
- 1999 - இலங்கை, புங்குடுதீவில் சாரதாம்பாள் சரவணபவானந்தக் குருக்கள் (29) என்ற பெண் இலங்கைக் கடற்படையினர் எனச் சந்தேகிக்கப்பட்டவர்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
- 2005 - இரண்டாம் உலகப் போரில் இழைத்த குற்றங்களுக்காக ஜோன் டெம்ஜான்ஜுக் என்பவர் உக்ரேனுக்கு நாடுகடத்த ஐக்கிய அமெரிக்காவின் நீதிமன்றம் உத்தரவிட்டது.
- 2006 - எதியோப்பிய மற்றும் சோமாலிய அரசுத் துருப்புக்களும் சோமாலியா தலைநகர் மொகடிசுவைக் கைப்பற்றியதை அடுத்து இஸ்லாமிய போராட்ட அமைப்பின் போராளிகள் தலைநகரைக் கைவிட்டு வெளியேறினர்.
- 2007 - நேபாளத்தின் இடைக்கால நாடாளுமன்றம் நாட்டை குடியரசாக அறிவித்து மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.
பிறப்புகள் [தொகு]
- 1932 - திருபாய் அம்பானி, இந்தியத் தொழிலதிபர் (இ. 2002)
- 1937 - ரத்தன் டாடா, இந்திய டாட்டா குழுமங்களின் தலைவர்
- 1940 - அ. கு. ஆன்டனி, இந்திய அரசியல்வாதி
- 1944 - கேரி முலிஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர்
- 1945 - பிரேந்திரா, நேபாள மன்னர் (இ. 2001)
- 1947 - நாஞ்சில் நாடன், எழுத்தாளர்
- 1954 - டென்செல் வாஷிங்டன், அமெரிக்க நடிகர்
இறப்புகள் [தொகு]
- 1994 - கோபாலசாமி மகேந்திரராஜா, விடுதலைப் புலிகளின் முன்னாள் உப தலைவர்