ஜூன் 15
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | சூன் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | ||||||
| MMXIII | ||||||
ஜூன் 15 கிரிகோரியன் ஆண்டின் 166ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 167ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 199 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- கிமு 763 - மெசொப்பொத்தேமியாவின் வரலாற்றுக் காலக்கோட்டைக் கண்டறிய உதவிய சூரிய கிரகணம் ஒன்றை அசீரியர்கள் பதிந்தார்கள்.
- 923 - பிரான்சின் முதலாம் ரொபேர்ட் மன்னன் கொல்லப்பட்டான்.
- 1184 - நோர்வேயின் ஐந்தாம் மாக்னஸ் மன்னன் ஃபிம்ரெயிட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்டான்.
- 1246 - இரண்டாம் பிரெடெரிக்கின் இறப்புடன் ஆஸ்திரியாவின் பாபன்பேர்க் அரச வம்சம் அழிந்தது.
- 1389 - கொசோவோவில் இடம்பெற்ற சமரில் ஒட்டோமான் படைகள் செர்பியர்களையும், பொஸ்னியர்களையும் தோற்கடித்தனர்.
- 1667 - சான் பாப்டிஸ்ட் டெனிஸ் என்ற பிரெஞ்ச் மருத்துவர் முதன் முதலில் மனித இரத்த மாற்றீட்டை செயற்படுத்தினார்.
- 1752 - மின்னல் ஒரு மின்சாரம் என்பதை பெஞ்சமின் பிராங்கிளின் நிறுவினார்.
- 1775: அமெரிக்கப் புரட்சிப் போர்: ஜோர்ஜ் வாஷிங்டன் அமெரிக்கத் தரைப்படைத் தளபதியாக நியமனம் பெற்றார்.
- 1808 - ஜோசப் பொனபார்ட் ஸ்பெயின் மன்னனாக முடி சூடினான்.
- 1836 - ஆர்கன்சா ஐக்கிய அமெரிக்காவின் 25வது மாநிலமானது.
- 1844 - இறப்பர் பதப்படுத்தும் முறை (vulcanization) சார்ல்ஸ் குடியர் என்பவரால் காப்புரிமம் பெறப்பட்டது.
- 1846 - இலங்கையின் ரோயல் ஏசியாட்டிக் சபை என்ற அமைப்பு தனது முதலாவது இதழை வெளியிட்டது.
- 1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜீனியாவின் பீட்டர்ஸ்பேர்க் நகர் அமெரிக்கப் படைகளின் முற்றுகைக்குள்ளானது.
- 1904 - நியூ யோர்க்கில் ஜெனரல் ஸ்லோகம் என்ற கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தில் 1021 பேர் கொல்லப்பட்டனர்.
- 1911 - ஐபிஎம் நிறுவனம் அமைக்கப்பட்டது.
- 1938 - பிரித்தானியாவில் லாஸ்லோ பைரோ குமிழ் முனைப் பேனாக்களைக் கண்டுபிடித்தார்.
- 1944 - இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் சாய்ப்பான் தீவை கைப்பற்றினர்.
- 1954 - ஐரோப்பிய உதைப்பந்தாட்டக் கூட்டமைப்பு யூஏஃபா சுவிட்சர்லாந்தில் அமைக்கப்பட்டது.
- 1984 - யாழ்ப்பாணம் காரைநகரில் இலங்கையின் கடல் விமானம் ஒன்று விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
- 1996 - ஐக்கிய இராச்சியம், மான்செஸ்டரில் இடம்பெற்ற தீவிரவாதிகளின் குண்டுத்தாக்குதலில் 200 பேர் காயமடைந்தனர். நகரின் மத்திய பகுதி பெரும் சேதத்துக்குள்ளானது.
- 2007 - உலகின் மிகவும் நீளமான 34 கிமீ நீள தொடருந்து சுரங்கப் பாதை சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலைக்குக் கீழாக அமைக்கப்பட்டது.
- 2009 - ரிச்மண்ட் ஹில் முருகன் கோவில் கொடியேற்றம்.
- 2009 - ஸ்காபோரோ பெரிய சிவன் கோவில் தீர்த்தம்.
பிறப்புகள் [தொகு]
- 1914 - யூரி அந்திரோப்பொவ், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் (இ. 1984)
- 1950 - லக்ஸ்மி மிட்டால், லண்டனைச் சேர்ந்த உலகச் செல்வந்தர்களில் ஒருவர்.
- 1953 - உமர் தம்பி, தமிழ்க் கணிமைக்கு சிறந்த பங்களிப்புக்களை வழங்கியவர் (இ. 2006)
இறப்புகள் [தொகு]
- 1838 - ரோணியஸ், ஜெர்மனியத் தமிழறிஞர் (பி. 1790)
- 1849 - ஜேம்ஸ் போக், ஐக்கிய அமெரிக்காவின் 11வது அதிபர் (பி. 1795)
- 1948 - ராஜா சர் அண்ணாமலை செட்டியார், (பி. 1881)
- 1971 - வெண்டல் ஸ்டான்லி, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1904)
- 2008 - தங்கம்மா அப்பாக்குட்டி, ஈழத்தின் ஆன்மிகவாதி (பி. 1925)