இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம்
இலார்ட்சு
Lord's Cricket Stadium Panoramic.jpg
இலார்ட்சு துடுப்பாட்ட மைதானத்தின் அகல்காட்சி
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
அரங்கத் தகவல்கள்
அமைவிடம் செயின்ட் ஜான்சு வுட், இலண்டன்
அமைப்பு 1814
இருக்கைகள் 28,000
உரிமையாளர் மேரைல்போன் துடுப்பாட்ட சங்கம்
குத்தகையாளர் இங்கிலாந்து மற்றும் வேல்சு துடுப்பாட்ட வாரியம்
முடிவுகளின் பெயர்கள் அணிக்கூடார முனை
நர்சரி முனை
பன்னாட்டுத் தகவல்கள்
முதல் தேர்வு சூலை 21 1884: இங்கிலாந்து எதிர் ஆஸ்திரேலியா
கடைசித் தேர்வு ஆகத்து 20 2012: இங்கிலாந்து எதிர் தென்னாபிரிக்கா
முதல் ஒரு நாள் ஆகத்து 26 1972: இங்கிலாந்து எதிர் ஆஸ்திரேலியா
கடைசி ஒருநாள் செப்டம்பர் 16 2011: இங்கிலாந்து எதிர் இந்தியா
உள்நாட்டு அணியின் தகவல்கள்
ஆண்டுகள் அணி
1814 – நடப்பு மேரைல்போன் துடுப்பாட்ட சங்கம்
1877 – நடப்பு மிடில்செக்சு கௌன்டி துடுப்பாட்ட சங்கம்

சூலை 24, 2011 இன் படி
மூலம்: CricketArchive

இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம் (Lord's Cricket Ground) பொதுவாக இலார்ட்சு, ஐக்கிய இராச்சியத்தின் தலைநகர் இலண்டனின் செயின்ட். ஜான்சு வுட் பகுதியில் அமைந்துள்ள ஓர் துடுப்பாட்ட மைதானம் ஆகும். இதனுடைய நிறுவனர் தாமசு இலார்டு நினைவாக பெயரிடப்பட்டுள்ள இவ்விளையாட்டரங்கம் மேரைல்போன் துடுப்பாட்ட சங்கத்திற்கு சொந்தமானது. மிடில்செக்சு கௌன்ட்டி துடுப்பாட்ட சங்கம், இங்கிலாந்து மற்றும் வேல்சு துடுப்பாட்ட வாரியம், மற்றும் ஐரோப்பிய துடுப்பாட்ட அவையின் இருப்பிடமாக இது விளங்குகிறது. ஆகத்து 2005 வரை பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை (ஐசிசி)யின் தலைமையிடமாகவும் இருந்தது. மிகப் பரவலாக இந்த மைதானம் "துடுப்பாட்டத்தின் தாயகம்" எனக் குறிப்பிடப்படுகிறது.[1] இங்கு உலகின் மிகப் பழமையான விளையாட்டு அருங்காட்சியகம் உள்ளது.[2]

துவக்க வரலாறு[தொகு]

தற்போதைய இலார்ட்சு மைதானத்தில் விளையாடப்பட்ட முதல் ஆட்டமாக மேரைல்போன் துடுப்பாட்ட சங்கத்திற்கும் ஹெர்ட்போர்டுசையருக்கும் சூன் 22, 1814இல் நடந்த ஆட்டம் குறிப்பிடப்படுகிறது.[3]

மிகவும் தொன்மையான துடுப்பாட்ட (இன்றுவரை தொடரும்) நிகழ்ச்சி ஈட்டனுக்கும் ஹர்ரோவிற்கும் ஆண்டுதோறும் நடைபெறும் ஆட்டமாகும். இந்த ஆட்டம் முதன்முதலாக பழைய மைதானத்தில் 1805இலும் தற்போதைய மைதானத்தில் சூலை 1818இலும் நடைபெற்றது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Lord's". Cricinfo. பார்த்த நாள் 22 August 2009.
  2. see MCC museum webpage
  3. CricketArchive – match scorecard. Retrieved on 27 July 2009.

வெளி இணைப்புகள்[தொகு]