நகுல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நகுல் | |
|---|---|
| இயற் பெயர் | நகுல் ஜெய்தேவ் |
| பிறப்பு | சூன் 15, 1984 மும்பாய், மகாராஷ்டிரா, இந்தியா |
| தொழில் | நடிகர், பின்னணிப் பாடகர் |
| நடிப்புக் காலம் | 2003-இன்று வரை |
நகுல் என்ற நகுலன் (பிறப்பு: ஜூன் 15, 1984) தமிழ் நடிகர் மற்றும் பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் நடிகை தேவயானியின் உடன்பிறந்த தம்பி ஆவார். இயக்குனர் சங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தில் முன்னனி கதாநாயகனாக நடித்த இவர், அந்த படத்தில் பாடலும் பாடியுள்ளார்.