இயற்கை மீள்மம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இயற்கை மீள்மத்தின் வடிப்பு முறை .

இயற்கை மீள்மம் (இயற்கை ரப்பர் அல்லது இயற்கை இறப்பர், Natural Rubber ) என்பது சில வகை மரங்களில் இருந்து கிடக்க கூடிய பாலைப் போன்ற ஒரு மீள் திறன் கொண்ட ஒரு வகை திரவம் ஆகும் . அந்த மரங்களின் தண்டை கிழித்தால் வடிகின்ற பால் போன்ற வெள்ளை திரவமே மீள்மம் ஆகும்.

இறப்பர் மிகவும் மீள்தன்மையுடையதும், நீர் ஊடுபுகவிடுதிறன் மிகக் குறைந்ததுமாகும். எனவே இது சிறப்பான பொருட்களை உருவாக்கப் பயன்படுகிறது. இறப்பர் முதன்முதலில் பிரேசிலில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் ஆங்கிலேயர்களால் தமது குடியேற்ற நாடுகளில் வர்த்தகப் பயிராகப் பயிரிடப்பட்டது. இன்று உலகில் 94%மான இயற்கை இறப்பர் ஆசியாவிலிருந்தே ஏற்றுமதி செய்யப்படுகிறது. தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் இறப்பரை பெருமளவில் ஏற்றுமதி செய்கின்றன.

இயற்கை இறப்பர் ஐசோபிரீனின் பல்பகுதியமாகும்(cis-1,4-polyisoprene). இது மீள்தன்மையானதும் வெப்பமிளக்கியுமாகும். இதனுடன் கந்தகத்தை சேர்த்து வல்கனைசுப் படுத்துவதன் மூலம் பயன்படுத்தக்கூடிய இறப்பர் உருவாக்கப்படுகிறது.


[தொகு] வெளியிணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=இயற்கை_மீள்மம்&oldid=1107833" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்