மார்ச் 17
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | மார்ச் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||
| MMXIII | ||||||
மார்ச் 17 கிரிகோரியன் ஆண்டின் 76ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 77ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 289 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1776 - அமெரிக்கப் புரட்சி: பிரித்தானியப் படைகள் மசாசுசெட்சின் பொஸ்டன் நகரை விட்டு அகன்றனர்.
- 1805 - நெப்போலியன் தலைவனாக இருந்த இத்தாலியக் குடியரசு, இத்தாலியப் பேரரசு ஆனது. நெப்போலியன் அதன் பேரரசன் ஆனான்.
- 1845 - இறப்பர் பட்டி (rubber band) கண்டுபிடிக்கப்பட்டது.
- 1861 - இத்தாலியப் பேரரசு (1861-1946) அமைக்கப்பட்டது.
- 1886 - மிசிசிப்பியில் 20 ஆபிரிக்க அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர்.
- 1891 - பிரித்தானியாவின் எஸ்எஸ் யூட்டோப்பியா என்ற கப்பல் கிப்ரால்ட்டர் கரையில் மூழ்கியதில் 574 பேர் கொல்லப்பட்டனர்.
- 1919 - றோவ்லட் சட்டத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதற்காக மகாத்மா காந்தி சென்னை வந்தார்.
- 1942 - மேற்கு உக்ரேனின் லிவிவ் என்ற இடத்தைச் சேர்ந்த யூதர்கள் கிழக்கு போலந்தில் பெல்செக் என்ற இடத்தில் வைத்து நாசி ஜெர்மனியரினால் நச்சு வாயு செலுத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
- 1950 - கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆய்வாளர்கள் கலிபோர்னியம் என்ற 98வது தனிமத்தைக் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.
- 1958 - ஐக்கிய அமெரிக்கா வங்கார்ட் 1 செய்மதியை ஏவியது.
- 1959 - டென்சின் கியாட்சோ, 14வது தலாய் லாமா, திபெத்தில் இருந்து வெளியேறி இந்தியா வந்து சேர்ந்தார்.
- 1966 - ஆல்வின் என்ற நீர்மூழ்கிக் கப்பல் காணாமல் போன ஐக்கிய அமெரிக்காவின் ஐதரசன் குண்டை மத்திய தரைக் கடல்பகுதியில் ஸ்பெயினுக்கருகில் கண்டுபிடித்தது.
- 1969 - கோல்டா மெயர் (Golda Meir) இஸ்ரவேலின் முதலாவது பெண் பிரதமரானார்.
- 1970 - மை லாய் படுகொலைகள் தொடர்பான தகவல்களை வெளியிடாமல் மறைத்த குற்றத்துக்காக அமெரிக்க இராணுவம் 14 இராணுவ அதிகாரிகள் மீது குற்றம் சாட்டியது.
- 1988 - கொலம்பியாவின் போயிங் விமானம் ஒன்று வெனிசுவேலாவின் எல்லையில் உள்ள மலை ஒன்றில் மோதியதில் 143 பேர் கொல்லப்பட்டனர்.
- 1988 - எரித்திரியாவில் எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணியினர் (EPLF) எதியோப்பிய இராணுவ நிலைகளை நோக்கி மும்முனைத் தாக்குதலை ஆரம்பித்தனர்.
- 1992 - ஆர்ஜெண்டீனாவில் இஸ்ரேல் தூதரகத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுவெடிப்பில் 29 பேர் கொல்லப்பட்டு 242 பேர் படுகாயமடைந்தனர்.
- 1996 - இலங்கை அணி ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்து துடுப்பாட்ட உலகக் கிண்ணத்தை வென்றது.
- 2000 - உகாண்டாவில் கடவுளின் பத்துக் கட்டளைகளை மேம்படுத்தும் மத இயக்கம் ஒன்றின் உறுப்பினர்கள் 800 பேர் வரையில் அவ்வியக்கத் தலைவர்களினால் படுகொலை செய்யப்பட்டனர்.
பிறப்புக்கள் [தொகு]
- 1881 - வால்ட்டர் ஹெஸ், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1973)
- 1920 - ஷேக் முஜிபுர் ரகுமான், வங்காள தேசத்தின் தந்தை (இ. 1975)
இறப்புக்கள் [தொகு]
- 1937 - ஒஸ்டின் சாம்பர்லேன், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர் (பி. 1863)
- 1956 - ஐரீன் ஜோலீயோ-கியூரி, வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1897)
- 1983 - ஹால்டன் ஹார்ட்லைன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1903)