புனித பேட்ரிக்கின் நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புனித பேட்ரிக்கின் நாள்
Kilbennan St. Benin's Church Window St. Patrick Detail 2010 09 16.jpg
புனித பேட்ரிக்கின் உருவம் பொறிக்கப்பட்ட ஆலய கண்ணாடி, புனித பெனின் ஆலயம், அயர்லாந்து
அதிகாரப்பூர்வ பெயர் புனித பேட்ரிக்கின் நாள்
பிற பெயர்(கள்) புனித பேட்ரிக்கின் விழா
பேட்ரிக்கின் நாள்[1][2]
கடைபிடிப்போர் ஐரிய மக்கள் மற்றும் ஐரிய பூர்வீகம் உடையோர்,
கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம், கிழக்கு மரபுவழி திருச்சபை, லூதரனியம்
வகை கிறித்தவம், கலாச்சாரம், நாடு சார்
முக்கியத்துவம் புனித பேட்ரிக்கின் விழா, அயர்லாந்தில் கிறித்துவத்தின் வருகையை நினைவு கூற[3]
கொண்டாட்டங்கள் பேரணிகள், பச்சை நிற உடையணிதல், ஐரிய பியர் அல்லது விஸ்கி அருந்துவது
அனுசரிப்புகள் திருப்பலி அல்லது பிற வழிபாடுகள்
நாள் 17 மார்ச்
காலம் ஒரு நாள்
நிகழ்வு ஆண்டுதோறும்


புனித பேட்ரிக்கின் நாள் அல்லது புனித பேட்ரிக்கின் விழா (ஐரிஷ்: Lá Fhéile Pádraig) என்பது ஆண்டுதோறு 17 மார்ச் அன்று கொண்டாடப்படும் சமய கலாச்சார விடுமுறை நாள் ஆகும். அயர்லாந்தின் பாதுகாவலரான புனித பேட்ரிக்கின் (அண். AD 385–461) இறப்பை நினைவு கூறவும், அயர்லாந்தில் கிறித்துவத்தின் வருகையை நினைவு கூறவும்[3] ஐரிய மக்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை சிறப்பிக்கவும்[4] கொண்டாடப்படுகின்றது.

புனித பேட்ரிக்கின் நாள் ஒரு கிறித்தவ விழா நாளாக 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கொண்டாடப்பட்டது. இது தற்போது கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம் (குறிப்பாக அயர்லாந்து திருச்சபை),[5] கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றும் லூதரனியம் ஆகிய சபைகளில் கொண்டாடப்படுகின்றது.

இந்நாளில் பொதுவாக பேரணியில் செல்வது, ஐரிய மக்களின் மரபு இசை, நடனம், பச்சை நிற உடைகள் அணிவது வழக்கமாகும்.[6] கிறித்தவர்கள் ஆலய வழிபாட்டில் பங்கு பெருவர்.[4][7] இவ்விழா பொதுவாக தவக் காலத்தில் நிகழ்வதாலும், இவ்விழாவன்று நோன்புக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாலும் இந்த நாள் மது அருந்துவதோடு அதிகம் தொடர்புபடுத்தப்பட்டது.[4][6][8][9]

அயர்லாந்து குடியரசு,[10] வட அயர்லாந்து,[11] நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர் மற்றும் மொன்செராட் ஆகிய இடங்களில் இது பொது விடுமுறை நாளாகும். அயர்லாந்து மக்கள் அதிகம் வசிக்கும் கனடா, அமெரிக்க ஐக்கிய நாடு, அர்கெந்தீனா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இடங்களிலும் இது பெருவாரியாகக் கொண்டாடப்படுகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "St. Patty's Day celebration packs extra emotion". CBS Evening News. மார்ச் 16, 2013. http://www.cbsnews.com/video/watch/?id=50142993n. பார்த்த நாள்: மார்ச் 22, 2013. 
  2. "100,000 at St. Patrick's Day Block Party in St. Paul". ABC 5 Eyewitness News. 16 மார்ச் 2013. http://kstp.com/news/stories/S2966050.shtml?cat=1. பார்த்த நாள்: மார்ச் 22, 2013. 
  3. 3.0 3.1 Kevin Meethan, Alison Anderson, Steven Miles. Tourism, Consumption & Representation. CAB International. 
  4. 4.0 4.1 4.2 Circles of Tradition: Folk Arts in Minnesota. Minnesota Historical Society Press. http://books.google.com/books?id=OstE2fueRvcC&pg=PA52&dq=patricks+day+celebration+of+irish+culture+religious&hl=en&ei=rsCBTZ7pDLKN0QHX2NngCA&sa=X&oi=book_result&ct=result&resnum=3&ved=0CFAQ6AEwAg#v=onepage&q=patricks%20day%20celebration%20of%20irish%20culture%20religious&f=false. பார்த்த நாள்: 13 நவம்பர் 2010. "In nineteenth-century America it became a celebration of Irishness more than a religious occasion, though attending Mass continues as an essential part of the day." 
  5. ""St Patrick's Day celebrations". Church of Ireland Notes from ''The Irish Times''. Official Church of Ireland website.". Ireland.anglican.org (2011-03-12). பார்த்த நாள் 2013-03-17.
  6. 6.0 6.1 Circles of Tradition: Folk Arts in Minnesota. Minnesota Historical Society Press. http://books.google.com/books?id=OstE2fueRvcC&pg=PA52&dq=patricks+day+celebration+of+irish+culture+religious&hl=en&ei=rsCBTZ7pDLKN0QHX2NngCA&sa=X&oi=book_result&ct=result&resnum=3&ved=0CFAQ6AEwAg#v=onepage&q=patricks%20day%20celebration%20of%20irish%20culture%20religious&f=false. பார்த்த நாள்: 13 நவம்பர் 2010. "The religious occasion did involve the wearing of shamrocks, an Irish symbol of the Holy Trinity, and the lifting of Lenten restrictions on drinking." 
  7. Edna Barth. Shamrocks, Harps, and Shillelaghs: The Story of the St. Patrick's Day Symbols. Sandpiper. http://books.google.com/books?id=7FleEqDJZD8C&pg=PA7&dq=patricks+day+church&hl=en&ei=wTmCTePLF8yL0QGh4u3ICA&sa=X&oi=book_result&ct=result&resnum=8&ved=0CFwQ6AEwBw#v=onepage&q&f=false. பார்த்த நாள்: 13 நவம்பர் 2010. "For most Irish-Americans, this holiday is partially religious but overwhelmingly festive. For most Irish people in Ireland the day has little to do with religion at all. St. Patrick's Day church services are followed by parades and parties, the latter being the best attended. The festivities are marked by Irish music, songs, and dances." 
  8. John Nagle. Multiculturalism's Double-Bind. Ashgate Publishing. http://books.google.com/books?id=zqMCc37dW1kC&pg=PA118&dq=St.+Patricks+Day+lent&hl=en&ei=IMWBTezGJqy60QGy7bjFCA&sa=X&oi=book_result&ct=result&resnum=6&ved=0CEwQ6AEwBTgK#v=onepage&q&f=false. பார்த்த நாள்: 13 நவம்பர் 2010. "Like many other forms of carnival, St. Patrick's Day is a feast day, a break from Lent in which adherents are allowed to temporarily abandon rigorous fasting by indulging in the forbidden. Since alcohol is often proscribed during Lent the copious consumption of alcohol is seen as an integral part of St. Patrick's day." 
  9. James Terence Fisher. Communion of Immigrants: A History of Catholics in America. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். http://books.google.com/books?id=voeg2IjM4YAC&pg=PA88&dq=st.+patrick's+day+lent&hl=en&ei=l8iBTc_SHPKM0QGY3-XOCA&sa=X&oi=book_result&ct=result&resnum=8&ved=0CFIQ6AEwBzgU#v=onepage&q=dispensation&f=false. பார்த்த நாள்: 13 நவம்பர் 2010. "The 40-day period (not counting Sundays) prior to Easter is known as Lent, a time of prayer and fasting. Pastors of Irish- American parishes often supplied "dispensations" for St. Patrick s Day, enabling parishioners to forego Lenten sacrifices in order to celebrate the feast of their patron saint." 
  10. "Public holidays in Ireland". Citizens Information Board. பார்த்த நாள் 13 நவம்பர் 2010.
  11. "Bank holidays". NI Direct. பார்த்த நாள் 13 நவம்பர் 2010.