மார்ச் 22
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மார்ச்சு 22 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| << | மார்ச் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||
| MMXIII | ||||||
மார்ச் 22 கிரிகோரியன் ஆண்டின் 81ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 82ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 284 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள்[தொகு]
- 1622 - வேர்ஜினியாவில் ஜேம்ஸ்டவுன் நகரில் அல்கோன்கியான் பழங்குடிகள் 347 ஆங்கில குடியேற்றவாசிகளைப் படுகொலை செய்தனர்.
- 1829 - கிரேக்கத்துக்கான எல்லைகளை மூன்று வல்லரசுகளான பிரித்தானியா, பிரான்ஸ், ரஷ்யா ஆகியன வரையறுத்தன.
- 1873 - புவேர்ட்டோ ரிக்கோவின் ஸ்பானிய தேசிய சபையில் அந்நாட்டில் அடிமைத் தொழிலை அழிக்க சட்டமியற்றப்பட்டது.
- 1895 - முதன் முதலாக லூமியேர சகோதரர்கள் அசையும் திரைப்படத்தை பிரத்தியேகமாகக் காண்பித்தார்கள்.
- 1939 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி லித்துவேனியாவிடம் இருந்து மெமெல் பிரதேசத்தைக் கைப்பற்றியது.
- 1943 - இரண்டாம் உலகப் போர்: பெலாரசின் காட்டின் நகர மக்கள் அனைவரும் நாசி ஆதிக்கவாதிகளால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.
- 1945 - அரபு கூட்டமைப்பு கெய்ரோவில் அமைக்கப்பட்டது.
- 1960 - ஆர்தர் ஷாவ்லொவ், மற்றும் சார்ல்ஸ் டவுன்ஸ் ஆகியோர் லேசருக்கான முதலாவது காப்புரிமத்தைப் பெற்றார்கள்.
- 1965 - இலங்கையில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து டட்லி சேனநாயக்கா தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைத்தது.
- 1993 - இன்டெல் நிறுவனம் முதல் பென்டியம் chip (80586) இனை அறிமுகம் செய்தது.
- 1995 - சோவியத் விண்வெளிவீரர் வலேரி பொல்யாக்கொவ் விண்ணில் 438 நாட்கள் கழித்துவிட்டு பூமி திரும்பினார்.
- 1997 - ஹேல்-பொப் வால்வெள்ளி பூமிக்குக் கிட்டவாக வந்தது.
- 2004 - ஹமாஸ் இயக்கத்தை ஆரம்பித்தவர்களில் ஒருவரான அஹமது யாசின் இஸ்ரேலிய வான் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
- 2006 - பாஸ்க் ஆயுதக்குழு ஈடிஏ காலவரையறையற்ற போர் நிறுத்தத்தை அறிவித்தது.
பிறப்புக்கள்[தொகு]
- 1868 - ரொபேர்ட் மில்லிக்கன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1953)
- 1931 - பேர்ட்டன் ரிக்டர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
இறப்புக்கள்[தொகு]
- 1627 - பிலிப்பே டி ஒலிவேரா, யாழ்ப்பாணத்தின் முதலாவது போர்த்துக்கேய ஆளுநர்.
- 1952 - டி. எஸ். சேனநாயக்கா, இலங்கையின் முதலாவது பிரதமர் (பி. 1884)
- 2005 - ஜெமினி கணேசன், தமிழ்த் திரையுலக நடிகர் (பி. 1920)