செப்டம்பர் 24
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | செப்டம்பர் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | |||||
| MMXIII | ||||||
செப்டம்பர் 24 கிரிகோரியன் ஆண்டின் 267வது நாளாகும். நெட்டாண்டுகளில் 268வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 98 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 622 - முகமது நபி மெக்காவில் இருந்து மதினாவுக்கு இடம்பெயர்ந்தார் (ஹிஜ்ரா).
- 1664 - நெதர்லாந்து நியூ ஆம்ஸ்டர்டாமை இங்கிலாந்துக்குக் கொடுத்தது.
- 1674 – பேரரசர் சிவாஜியின் இரண்டாவது முடிசூட்டு விழா (தாந்திரீக சடங்கு) இடம்பெற்றது.
- 1789 – அமெரிக்க உச்சநீதி மன்றம் நிறுவப்பட்டது.
- 1799 - கட்டபொம்மனும் இன்னும் 6 பேரும் புதுக்கோட்டை அரசன் விஜயரகுநாத தொண்டைமானால் கைது செய்யப்பட்டுப் பின்னர் செப் 29இல் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
- 1840 - இலங்கை வங்கி அமைக்கப்பட்டது.
- 1841 - புருணை சுல்தான் சரவாக் மாநிலத்தை பிரித்தானியாவுக்குக் கொடுத்தான்.
- 1869 - கறுப்பு வெள்ளி: ஜேய் கூல்ட், ஜேம்ஸ் பிஸ்க் என்ற இரு செல்வந்தர்களின் சூழ்ச்சியை முறியடிக்க [ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]] பெருமளவு தங்கத்தை விற்பனைக்கு விட்டதில், தங்க விலை சரிந்தது.
- 1898 - யாழ்ப்பாணம், இணுவிலில் பெண்களுக்கான மக்லியொட் மருத்துவமனையை அமெரிக்க மிசன் அமைத்தது.
- 1906 – வயோமிங்கில் உள்ள பேய்க் கோபுரம் அமெரிக்காவின் முதலாவது தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
- 1948 - ஹொண்டா நிறுவனம் அமைக்கப்பட்டது.
- 1968 – சுவாசிலாந்து ஐநாவில் இணைந்தது.
- 1973 - கினி-பிசாவு போர்த்துக்கலிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 1979 – உலகின் முதலாவது மின்னஞ்சல் சேவையை கம்பியூசேர்வ் ஆரம்பித்தது.
- 1990 - சனிக் கோளில் பெரும் வெண் புள்ளி ஒன்று தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டது.
பிறப்புக்கள் [தொகு]
- 1902 - ருஹொல்லா கொமெய்னி, ஈரானிய அரசியல்வாதி (இ. 1989)
- 1936 - சிவந்தி ஆதித்தன் தினத்தந்தி உரிமையாளர் (இ. 2013)
இறப்புகள் [தொகு]
- 2006 - பத்மினி, தென்னிந்திய நடிகை (பி. 1932)
- 2009 - நாத்திகம் இராமசாமி, இதழாசிரியர், பகுத்தறிவாளர் (பி. 1932)
சிறப்பு நாள் [தொகு]
- கினி பிசாவு - விடுதலை நாள் (1973)
- ட்றினிடாட் மற்றும் டொபாகோ - குடியரசு நாள் (1976)