இலங்கை வங்கி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வகை | பொது |
|---|---|
| நிறுவுகை | 1939 [1] |
| தொழில்துறை | நிதி |
| உற்பத்திகள் | வங்கி மற்றும் நிதியியல் தொடர்பான சேவைகள் |
| இணையத்தளம் | boc.lk |
இலங்கை வங்கி (Bank of Ceylon) இலங்கையின் மிகப் பெரிய அரசுடமை வங்கி. இதன் தலைமைக் காரியாலயம் இலங்கையின் வர்த்தக மற்றும் அரசியல் தலைநகரமான கொழும்பில் அமைந்துள்ளது. இது 303 உள்ளநாட்டு கிளைகளையும் 3 வெளிநாட்டு கிளைகளையும் தன்னகத்தே கொண்டு தனது சேவையினை விரிவாக்கி உள்ளது. இவ்வங்கியானது பல்வேறுபட்ட சில்லறை, மொத்த, சர்வதேச, முதலீட்டு வங்கியியல், பல்வேறுபட்ட சேவைகள், கடனட்டை வசதி, வரவட்டை வசதி, நகை அடகு சேவை போன்ற பல்வேறு சேவைகளை வழங்குகிறது.
பொருளடக்கம் |
[தொகு] வரலாறு
- 1939: இலங்கை வங்கியினை எர்னெஸ்ட் டீ சில்வா அவர்கள் ஆரம்பித்ததுடன் அவரே முதலாவது தலைவருமாவார். அக்காலப்பகுதியின் பிரித்தானிய ஆளுநரான அன்றுவ் கல்டிகொட் அவர்கள் வைபகபூர்வமாக ஆடி மாதம் முதலாம் திகதி 1939 அன்று ஆரம்பித்து வைத்தார்.
- 1941: இதன் முதலாவது கிளையை கண்டியிலும் அதனைத் தொடர்ந்து காலி , யாழ்பாணம் , மட்டக்களப்பு , திரிகோணமலை , பதுளை மற்றும் பானந்த்துரையிலும் நிறுவியது..
- 1949: இலங்கை வங்கி தனது முதலாவது கடல் கடந்த வங்கியை இங்கிலாந்து , ஐக்கிய இராட்சியத்தில் தொடங்கியது.
- 1961: இலங்கை அரசாங்கத்தினால் இலங்கை வங்கி தேசிய மயமாக்கப்பட்டது.
- 1972: விவசாய உற்பத்தியாக்கள் சட்டமானது நாடு பூராகவும் பயிர்த்தொழில் சேவை நிலையங்களை உருவாகுவதற்கு காரணமாக அமைந்தது. இதன் விளைவாக நாட்டின் கிராம புறங்களுக்கும் இலங்கை வங்கியின் கிளைகள் விஸ்த்தரிக்கப்பட்டன.
- 1979: சுதந்திரமான பரிமாற்று கட்டுபாட்டு விதிகள் அதனுடைய வெளிநாட்டு நாணய அலகு நிலையத்தை திறப்பதற்கு வழி வகுத்தது.
- 1981: மாலைதீவில் கிளை திறக்கப்பட்டது
- 1982: இது இலங்கையின் முதலாவது வியாபார வங்கியாக தெரிவு செய்யப்பட்டது.
- 1989: இலங்கையில் முதன் முறையாக வீசா அட்டை யினை அறிமுகப்படுத்தியது.
- 1995: "'இலங்கை வங்கி"' தனது கடல் கடந்த வங்கி கிளையினை கராச்சி, பாக்கிஸ்தான் ல் நிறுவியது.
- 1995: தனது கடல் கடந்த வங்கி கிளையினை சென்னை , இந்தியா ல் நிறுவியது.
[தொகு] இலங்கை வங்கியால் பேணப்படும் வைப்புக்களின் வகைகள்
- நடைமுறைக்கணக்கு (Current Deposits)
- சேமிப்பு கணக்கு (Savings Deposits)
- நிலையான வைப்பு(Fixed Deposits)
ஏனைய தொழிற்பாடுகளாக
- நிலையான வைப்புகளை பேணல்.
- நகை அடகுபிடித்தல்.
- நாணயமாற்றம் செய்தல்.
- சர்வதேச கொடுக்கல் வாங்கல்களப் பேணல்.
- ATM அட்டை,கடனட்டை(Credit card) வழங்கள்.
[தொகு] இலங்கையின் சில வணிக வங்கிகள்
- இலங்கை வங்கி
- மக்கள் வங்கி
- கொமர்ஷியல் வங்கி
- ஹட்டன் நசனல் வங்கி
- சம்பத் வங்கி
- செலான் வங்கி
- பான் ஏசியா வங்கி
- யூனியன் வங்கி
- நேசன் டிரஸ்ட் வங்கி