இணுவில்
| இணுவில் | |
| மாகாணம் - மாவட்டம் |
வட மாகாணம் - யாழ்ப்பாணம் |
| அமைவிடம் | |
| கால வலயம் | SST (ஒ.ச.நே.+5:30) |
இணுவில், இலங்கையின் வடமாகாணத்தில், யாழ்ப்பாண நகரத்துக்கு வடக்கில் சுமார் 5 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள ஒர் ஊர் ஆகும். இது யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ளது. இவ்வீதி இந்த ஊரைக் கிழக்கு இணுவில், மேற்கு இணுவில் என இரு பகுதிகளாகப் பிரிக்கின்றது. இணுவிலுக்கு வடக்கில் உடுவிலும், கிழக்கில் உரும்பிராயும், தெற்கில் கோண்டாவிலும், மேற்குத் திசையில் சுதுமலையும் அமைந்துள்ளன. வேளாண்மைச் செய்கைக்கான சிறு தோட்டங்கள் நிறைந்துள்ள இவ்வூர் புகையிலைச் செய்கைக்குப் பெயர் பெற்றது.
அமெரிக்க மிஷனால் நிறுவப்பட்ட மகப்பேற்று மருத்துவமனையான மக்லியொட் மருத்துவமனை மிகவும் புகழ் பெற்றது. சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் இம் மருத்துவ மனைக்குப் பெருமளவில் வந்தார்கள்.
பொருளடக்கம் |
இணுவிலில் அமைந்த புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் [தொகு]
- இராமநாதன் மகளிர் கல்லூரி
- யாழ். பலகலைக்கழக இசை, நுண்கலைப்பிரிவு
- இணுவில் மத்திய கல்லூரி
- இணுவில் இந்துக் கல்லூரி
இணுவில் தந்த புகழ் பூத்தோர் [தொகு]
- இணுவில் சின்னத்தம்பிப் புலவர் - இலக்கண, இலக்கிய நூலாசிரியர்
- வி. தெட்சணாமூர்த்தி - தவில் வித்வான்
- இணுவில் சின்னராசா - தவில் வித்வான்
- இணுவில் வீரமணி ஐயர்- சாகித்ய கர்த்தா, நடன ஆசிரியர்
- க. சண்முகம்பிள்ளை, மிருதங்கக் கலைஞர்
- ஆர். சிவலிங்கம் (உதயணன்)- சிறுகதை.நாவல் எழுத்தாளர்
- இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன்- எழுத்தாளர்
- இணுவையூர் மயூரன் (-ஈழத்துப்பித்தன்)- எழுத்தாளர்,வானொலி கலைஞர்
இணுவிலில் அமைந்துள்ள கோயில்கள் [தொகு]
புகழ் பெற்ற, பழமை வாய்ந்த இந்துக் கோயில்கள் பல இவ்வூரில் அமைந்துள்ளன. இவற்றுள் சிறப்பு வாய்ந்தவை வருமாறு:
- பரராஜசேகரப் பிள்ளையார் கோயில்
- இணுவில் காரைக்கால் சிவன் கோவில்
- சிவகாமி அம்மன் கோயில்
- செகராஜசேகரப் பிள்ளையார் கோயில்
- இணுவில் கந்தசுவாமி கோயில்
- மஞ்சத்தடி அருணகிரிநாத சிவசுப்பிரமணியர் திருக்கோவில்
- இணுவில் இளந்தாரி கோயில்
- இணுவில் கிழக்கு கப்பனைப் பிள்ளையார் கோயில் (அரசோலைப் பிள்ளையார் கோயில் எனவும் வழங்கப்படுகின்றது)
- இணுவில் வைரவர் ஆலயம்
வெளி இணைப்புக்கள் [தொகு]
- இணுவில் செகராச சேகரப்பிள்ளையார்
- இணுவில் செகராச சேகரப்பிள்ளையார் முகப்புத்தகம் Facebook
- இணுவையம்பதி முகப்புத்தகம் Facebook
- இணுவில் கிராமம்
- இணுவில் கந்தசுவாமி கோயில்
- இணுவில்