உடுவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உடுவில்
Gislanka locator.svg
Red pog.svg
உடுவில்
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - யாழ்ப்பாணம்
அமைவிடம் 9.734331° N 80.009311° E
கால வலயம் SST (ஒ.ச.நே.+5:30)

உடுவில் (uduvil) இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில், வலிகாமம் பகுதியில், உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு கிராமம். இது நான்கு புறமும் நெல் வயல்களும், மரக்கறி விளை நிலங்களும் சூழ்ந்துள்ள ஊர். யாழ்ப்பாண நகருக்கு வடக்கே சுமார் 8 கிலோ மீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. சுன்னாகம், கந்தரோடை, சங்குவேலி, மானிப்பாய், சுதுமலை, இணுவில் என்னும் ஊர்கள் உடுவிலின் எல்லைகளாக அமைந்துள்ளன. யாழ்ப்பாண நகரில் இருந்து வடக்கு நோக்கி உடுவிலைத் தொட்டுச் செல்லும் காங்கேசன்துறை வீதியும், மருதனார்மடம் சந்தியிலிருந்து, மேற்கு நோக்கி உடுவிலை ஊடறுத்துச் செல்லும் கைதடி - மானிப்பாய் வீதியும் உடுவில் ஊடான பிரதான போக்குவரத்து மார்க்கங்களாகும்.

மக்கள்[தொகு]

இங்குள்ள மக்கள் தமிழர்களாவர். பேசும் மொழி தமிழ் மொழி. இங்கு இந்துக்களும், கிறித்தவர்களும் ஒருங்கே வாழ்ந்து வருகின்றார்கள். கிறிஸ்தவர்களில் கத்தோலிக்க மதத்தை பின்பற்றுபவர்கள் அதிகமானாலும் புரட்டஸ்தாந்து மதத்தையும் பிற்காலங்களில் தோன்றிய ஏனைய கிறித்தவ மதப் பிரிவுகளைப் பின்பற்றுபவர்களும் வாழ்கின்றார்கள்.

தொழில்கள்[தொகு]

இங்குள்ள மக்களின் பிரதான தொழிலாக விவசாயமே விளங்கி வருகின்றது. ஆயினும் கல்வியறிவு வளர்ச்சியாலும், மக்கள் பொருளாதார ரீதியாக முன்னேற விளைந்தமையாலும், வாழ்க்கை செலவு அதிகரிப்பினாலும் தற்போதைய இளம் சந்ததியினர் அரசாங்க மற்றும் தனியார் தொழில்களை பெரும்பாலும் நாடிச் செல்கின்றனர். பலர் புதிய வியாபார, வணிக முயற்சிகளில் தம்மை ஈடுபடுத்தியுள்ளனர். இவற்றினை விட பரம்பரை பரம்பரையாக குறிப்பிட்ட சில தொழில்களில் ஈடுபட்டு வந்தவர்கள், சிலர் வேறு தொழில்களை நாடிச் செல்ல மற்றயவர்கள் தம் பரம்பரை தொழிலையே நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

உடுவிலின் எல்லைகளிலுள்ள கிராமங்கள்[தொகு]

உடுவில் கிராம சேவையாளர் பிரிவுகள்[தொகு]

உடுவில் கிராமமானது 5 கிராம அலுவலர் பிரிவுகளை கொண்டுள்ளது. அவையாவன

 • யா/182 உடுவில் தென் மேற்கு
 • யா/183 உடுவில் தென் கிழக்கு
 • யா/184 உடுவில் மத்தி
 • யா/185 உடுவில் வட மத்தி
 • யா/186 உடுவில் வடக்கு

உடுவிலில் அமைந்துள்ள பாடசாலைகள்[தொகு]

 • உடுவில் மகளிர் கல்லூரி (தரம் 1 முதல் உயர்தரம் வரை) அமெரிக்க மிஷனால் நிறுவப்பட்ட பெண்கள் பாடசாலை. யாழ்ப்பாணத்தின் பிரபலமான பாடசாலைகளுள் ஒன்று. பெண்கள் தங்கிப் படிப்பதற்காக அமைக்கப்பட்ட இது, இவ்வகையில் தெற்காசியாவிலேயே முதலாவது எனக் கூறப்படுகின்றது. இதற்கென ஒரு நீண்ட தனி வரலாறும் கல்விப் பாரம்பரியமும் இருக்கின்றது.
 • உடுவில் அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலை (தரம் 1-5 வரை)
 • உடுவில் மான்ஸ் தமிழ் கலவன் பாடசாலை (தரம் 1-5 வரை)
 • உடுவில் மான்ஸ் பாடசாலை (தரம் 1-11 வரை)
 • உடுவில் முருகமூர்த்தி வித்தியாலயம் (தரம் 1-11 வரை)
 • உடுவில் மல்வத்தை ரோமன் கத்தோலிக்க பாடசாலை (தரம் 1-5 வரை)
 • உடுவில் புதுமடம் ரோமன் கத்தோலிக்க பாடசாலை (தரம் 1-5 வரை)

உடுவிலில் அமைந்துள்ள மத வழிபாட்டுத் தலங்கள்[தொகு]

உடுவிலில் அமைந்துள்ள இந்து ஆலயங்கள்[தொகு]

 • உடுவில் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம் உடுவில் கிராமத்தில் அமைந்துள்ள பிரபலமான ஒரு இந்து ஆலயம் எனலாம். இது பொதுவாக உடுவில் அம்மன் கோயில் எனவும் அறியப்படுகிறது.
 • உடுவில் சிவஞான பிள்ளையார் ஆலயம்
 • உடுவில் கிழக்கு கற்பக பிள்ளையார் ஆலயம்
 • உடுவில் மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயம்
 • உடுவில் காளி அம்பாள் ஆலயம்
 • உடுவில் முருகமூர்த்தி ஆலயம்
 • உடுவில் பஞ்சமுக பிள்ளையார் ஆலயம்
 • உடுவில் ஸ்ரீ பெரிய நாயகி அம்பள் ஆலயம்
 • உடுவில் மல்வம் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலயம்

உடுவிலில் அமைந்துள்ள கிறித்தவத் தேவாலயங்கள்[தொகு]

இங்கு 4 கிறித்தவத் தேவாலயங்கள் அமைந்துள்ளன. அவையாவன

 • உடுவில் புனித செபமாலை மாதா ஆலயம்
 • உடுவில் அமெரிக்க மிஷன் கிறிஸ்தவ தேவாலயம்
 • மல்வம் கத்தோலிக்க தேவாலயம்
 • புதுமடம் கிறிஸ்தவ தேவாலயம்

முக்கியமானவை[தொகு]

 • உடுவில் பிரதேச செயலகம்
 • உடுவில் பொது நூலகம்
 • உடுவில் துணை பொது நூலகம் - மருதனார்மடம்
 • மருதனார்மடம் வேளாண் சந்தை
 • "வாழ்வகம்"-விழிப்புலன் வலு இழந்தோரைப் பேணிக் காக்கும் தனியார் அமைப்பு
 • அரசினர் ஆரம்ப சுகாதார பராமரிப்புப் பிரிவு (Primary Medical Care Unit)
 • ஜசுபி (JACHUFI) பழச்சாறு மற்றும் பான உற்பத்தி தொழிற்சாலை

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

அமைவிடம்: 9°44′3.59″N, 80°0′33.52″E

"http://ta.wikipedia.org/w/index.php?title=உடுவில்&oldid=1453849" இருந்து மீள்விக்கப்பட்டது