அக்டோபர் 27
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | அக்டோபர் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||
| MMXIII | ||||||
அக்டோபர் 27 கிரிகோரியன் ஆண்டின் 300வது நாளாகும். நெட்டாண்டுகளில் 301வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 65 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 939 - முதலாம் எட்மண்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.
- 1275 - ஆம்ஸ்டர்டாம் நகரம் அமைக்கப்பட்டது.
- 1682 - பென்சில்வேனியாவின் பிலடெல்பியா நகரம் அமைக்கப்பட்டது.
- 1795 - ஸ்பானியக் குடியேற்றநாடுகளுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையேயான எல்லைகளை வரையறுக்கும் உடன்படிக்கை ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஸ்பெயினுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்டது.
- 1806 - பிரெஞ்சுப் படையினர் பேர்லின் நகரினுள் நுழைந்தனர்.
- 1807 - பிரெஞ்சு-ஸ்பானியப் படைகள் போர்த்துக்கலைக் கைப்பற்றின.
- 1810 - ஐக்கிய அமெரிக்கா முன்னாள் ஸ்பானியக் குடியேற்ற நாடான மேற்கு புளோரிடாவை இணைத்துக் கொண்டது.
- 1867 - கரிபால்டியின் படைகள் ரோம் நகருள் புகுந்தன.
- 1870 - 140,000 பிரெஞ்சுப் படை வீரர்கள் மெட்ஸ் நகரில் இடம்பெற்ற போரில் பிரஷ்யாவிடம் சரணடைந்தனர்.
- 1891 - ஜப்பானில் 8.0 நிலநடுக்கம் ஏற்பட்டதில் 7000 பேருக்கு மேல் கொலப்பட்டனர்.
- 1924 - உஸ்பெக் சோவியத் குடியரசு சோவியத் ஒன்றியத்தில் அமைக்கப்பட்டது.
- 1953 - தெற்கு அவுஸ்திரேலியாவில் ஈமியூ ஃபீல்ட் என்ற இடத்தில் டோட்டெம் 2 என்ற பிரித்தானிய அணுவாயுதச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
- 1958 - பாகிஸ்தான் முதலாவது சனாதிபதி இஸ்காண்டர் மிர்சா இராணுவப் புரட்சி ஒன்றில் பதவியில் இருந்து இறக்கப்பட்டு ஜெனரல் அயூப் கான் ஆட்சியைக் கைப்பற்றினார்.
- 1961 - நாசா தனது முதலாவது சட்டர்ன் 1 விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது.
- 1962 - ஐக்கிய அமெரிக்காவின் U-2 விமானம் ஒன்று கியூபாவில் சுட்டு வீழ்த்தப்பட்டது.
- 1971 - கொங்கோ மக்களாட்சிக் குடியரசு சயீர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
- 1979 - செயின்ட் வின்சென்ட் கிரெனேடின்ஸ் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1981 - சோவியத் நீர்மூழ்கிக்கப்பல் U 137 சுவீடனின் கிழக்குக் கரையில் மூழ்கியது.
- 1982 - யாழ்ப்பாணம், சாவகச்சேரி காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டது.
- 1990 - வட இலங்கை முஸ்லீம்களின் கட்டாய வெளியேற்றம்: யாழ்ப்பாண மாவட்டத்தைத் தாயகமாக கொண்ட முஸ்லிம்கள் அனைவரும் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டனர்.
- 1991 - துருக்மெனிஸ்தான், சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.
- 1991 - போலந்தில் 1936ம் ஆண்டுக்குப் பின்னர் முதற்தடவையாக சுதந்திரமான தேர்தல்கள் இடம்பெற்றன.
- 1999 - ஆர்மீனியாவில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் பிரதமர், அவைத் தலைவர் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.
- 2005 - பாரிசில் இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு கலவரம் ஏற்பட்டது.
- 2007 - கொங்கோவில் இடம்பெற்ற பெரு வெள்ளம் காரணமாக 30 பேர் கொல்லப்பட்டு 100 பேர் காயமடைந்தனர்.
பிறப்புக்கள் [தொகு]
- 1728 - ஜேம்ஸ் குக், பிரித்தானியாவின் கடற்படைக் கப்டன், நாடுகாண் பயணி (இ. 1779)
- 1858 - தியொடோர் ரோசவெல்ட், 26ஆவது அமெரிக்கக் குடியரசுத் தலைவர் (இ. 1919)
- 1920 - கே. ஆர். நாராயணன், இந்தியாவின் 10வது குடியரசுத் தலைவர்
- 1977 - குமார் சங்கக்கார, இலங்கையின் துடுப்பாளர்
இறப்புகள் [தொகு]
- 1605 - அக்பர், முகலாய மன்னன் (பி. 1542)
- 1980 - ஜோன் விளெக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1899)
- 1992 - டேவிட் போம், அமெரிக்க இயற்பியலாளர், தத்துவவியலாளர் (பி. 1917)
சிறப்பு நாள் [தொகு]
- செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ் - விடுதலை நாள் (1979)
- துருக்மெனிஸ்தான் - விடுதலை நாள் (1991)