கியூபா ஏவுகணை நெருக்கடி
| கியூபா ஏவுகணை நெருக்கடி | |||||||
|---|---|---|---|---|---|---|---|
| பனிப்போர் பகுதி | |||||||
CIA reference photograph of Soviet R-12 intermediate-range nuclear ballistic missile (NATO designation SS-4) in சிவப்பு சதுக்கம், மாஸ்கோ |
|||||||
|
|||||||
| பிரிவினர் | |||||||
Supported by: |
|||||||
| தளபதிகள் | |||||||
| இழப்புகள் | |||||||
| 1 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது 1 விமானம் சேதமானது 1 விமானி கொல்லப்பட்டார் |
|||||||
கியூபா ஏவுகணை நெருக்கடி (Cuban Missile Crisis, அக்டோபர் நெருக்கடி என கியூபாவிலும், கரீபிய நெருக்கடி (உருசியம்: Kарибский кризис) என சோவியத் ஒன்றியத்திலும் அறியப்படுவது) எனப்படும் பதிமூன்று நாட்கள் ஆனது சோவியத் ஒன்றியமும், கியூபாவும் சேர்ந்த அணிக்கும், ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையே அக்டோபர் 1962ல் பனிப்போரின் போது நிகழ்ந்த மோதல் ஆகும். ஆகஸ்ட் 1962ல் கியூப ஆட்சியை வீழ்த்த ஐக்கிய அமெரிக்கா செய்த பன்றிகள் விரிகுடா படையெடுப்பு, மங்கூஸ் செயற்பாடு போன்ற வெற்றியடையாத செயற்பாடுகளுக்கு பிறகு கியூப அரசாங்கமும் சோவியத் ஒன்றிய அரசாங்கமும் சேர்ந்து இரகசியமாக ஏவுகணைத் தளங்களை அமைக்க ஆரம்பித்தன. இந்த தளங்களில் பல நடுத்தர மற்றும் இடைப்பட்ட தரத்தில் உள்ள அணு ஏவுகணைகள் (MRBMs and IRBMs) அமெரிக்க கண்டம் முழுவதையும் தாக்கும் வகையில் நிலைநிறுத்தப்பட்டன. இந்த செயல் ஆனது 1958ல் ஐக்கிய அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் ஐக்கிய ராச்சியத்திலும், 1961ல் இத்தாலி மற்றும் துருக்கியிலும் மாஸ்கோ வரை தாக்கும் வகையில் நிலைநிறுத்தப்பட்ட பிறகே ஆரம்பிக்கப்பட்டது. அக்டோபர் 14, 1962ல் ஐக்கிய அமெரிக்க வான் படையின் லாக்ஹெட் யு-2 விமானம் கியூபாவில் சோவியத் ஒன்றிய ஏவுகணைத் தளங்கள் கட்டுமானத்தில் இருப்பதை படமெடுத்தது.
பெர்லின் முற்றுகை, சூயஸ் நெருக்கடி மற்றும் யோம் கிப்பூர் போர் போன்ற முக்கிய பனிப்போர் நிகழ்வுகளுடன் இந்த நெருக்கடியும் சேர்ந்து பனிப்போரானது அணு ஆயுத போராக மாறும் அளவிற்கு திருப்பிவிட்டது எனலாம்.[2]மேலும் இது முதல் முதாலாக ஆவணமாக்கப்பட்ட ஒருவருக்கொருவர் அழித்துக் கொள்வதற்கான (mutual assured destruction) அச்சுறுத்தல் ஆகும். இதுவே சர்வதேச ஆயுத ஒப்பந்தத்தை தீர்மானிப்பதில் முக்கிய காரணியாக இருந்தது.[3][4]
ஐக்கிய அமெரிக்கா கியூபாவை வான் மற்றும் கடல் மார்க்கமாக தாக்க நினைத்தது, ஆனால் அதற்கு பதிலாக இராணுவ முற்றுகையிட முடிவு செய்தது. சட்ட மற்றும் பிற காரணங்களுக்காக இதனை தனிமைப்படுத்ததல் என அமெரிக்கா அழைத்தது.[5] ஐக்கிய அமெரிக்கா கியூபாவிற்கு ஆயுதம் வழங்குவதை அனுமதிக்க முடியாது என அறிவித்தது. அதே நேரத்தில் சோவியத் ஒன்றியம், கியூபாவில் ஏற்கனவே அமைத்துள்ள மற்றும் அமைத்துக்கொண்டிருக்கும் ஏவுகணைத் தளங்களை அழிக்க வேண்டுமென வற்புறுத்தியது. இதற்கு கேர்ம்ளின் ஒத்துக்கொள்வார் என கென்னடி நிர்வாகம் மெலிதான நம்பிக்கையையே வைத்திருந்தது. மேலும் ஒரு இராணுவ மோதலை எதிர்பார்த்திருந்தது. சோவியத் ஒன்றியத்தின் நிக்கிட்டா குருசேவ் கென்னடிக்கு எழுதிய கடிதத்தில் உங்களின் சர்வதேச கடல் மற்றும் வான் வெளி முற்றுகையானது[5] மனித குலத்தை அணு ஆயுதப் போர் எனப்படும் நரகத்தில் தள்ள வழிவகுக்கிறது என எழுதியிருந்தார்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Axelrod, Alan (2009). The Real History of the Cold War: A New Look at the Past. New York: Sterling Publishing Co.. ISBN 978-1-4027-6302-1. http://books.google.com/?id=ZnYHG1eK-2AC. Retrieved April 22, 2010.
- ↑ Marfleet, B. Gregory. "The Operational Code of John F. Kennedy During the Cuban Missile Crisis: A Comparison of Public and Private Rhetoric". Political Psychology 21 (3): 545.
- ↑ "Briefing Room". Fourteen Days in October: The Cuban Missile Crisis. ThinkQuest (1997). பார்த்த நாள் December 30, 2010.
- ↑ "Letters between Khrushchev and Kennedy" (2010). பார்த்த நாள் December 30, 2010. Archive of correspondence between Kennedy and Khrushchev during Cuban Missile Crisis.
- ↑ 5.0 5.1 Ernest R May (2011). "John F Kennedy and the Cuban Missile Crisis". பார்த்த நாள் February 7, 2012. BBC History of the Cold War.