சாவகச்சேரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சாவகச்சேரி | |
| விடுமுறை நாளில் சாவகச்சேரி நகரின் தோற்றம் | |
| மாகாணம் - மாவட்டம் |
வட மாகாணம் - யாழ்ப்பாணம் |
| அமைவிடம் | |
| கால வலயம் | SST (ஒ.ச.நே.+5:30) |
சாவகச்சேரி இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள ஒரு நகரமாகும். இது யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தென்மராட்சி எனும் பிரிவில் அமைந்துள்ளது.
[தொகு] உள்நாட்டுப் போரில் சாவகச்சேரி
இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைப்பெற்றப் போது சாவக்கச்சேரி நகரையும் அதனை அண்டிய பகுதிகளிலும் பல உக்கிர சண்டைகள் நடைப்பெற்றன. 1995 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் கைப்பற்றியபோது சாவகச்சேரியும் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து இலங்கை இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. 2000 ஆம் ஆண்டில் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் போது புலிகள் சாவகச்சேரியைக் கைப்பற்றிய போதும் பின்னர் பின்வாங்கிச் சென்றனர்.
[தொகு] போக்குவரத்து
இலங்கை தொடருந்து வலையமைப்பில் நாவற்குழி, மீசாலை தொடருந்து நிலையங்களுக்கிடையில் சாவகச்சேரி அமைந்துள்ளது. எனினும் தொடருந்து போக்குவரத்து போரின் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
