நடராஜா ரவிராஜ்
| நடராஜா ரவிராஜ் Nadarajah Raviraj |
|
![]() |
|
|
|
|
| பதவியில் 2001 – 2006 |
|
| பின்வந்தவர் | ந. சிறீகாந்தா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
|---|---|
|
யாழ்ப்பாண நகர முதல்வர்
|
|
| பதவியில் 2001 – 2001 |
|
| முன்னவர் | பொன் சிவபாலன், தமிழர் விடுதலைக் கூட்டணி |
|
யாழ்ப்பாண நகர துணை முதல்வர்
|
|
| பதவியில் 1998 – 2001 |
|
|
யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர்
|
|
| பதவியில் 1998 – 2001 |
|
| அரசியல் கட்சி | தமிழர் விடுதலைக் கூட்டணி |
|
|
|
| பிறப்பு | சூன் 25, 1962 சாவகச்சேரி, இலங்கை |
| இறப்பு | நவம்பர் 10 2006 (அகவை 44) கொழும்பு, இலங்கை |
| தேசியம் | |
| பழைய மாணவர் | சாவகச்சேரி டிரிபேர்க் கல்லூரி யாழ் பரி யோவான் கல்லூரி |
| துறை | வழக்கறிஞர் |
| சமயம் | இந்து |
நடராஜா ரவிராஜ் (ஜூன் 25, 1962 - நவம்பர் 10, 2006) சட்டத்தரணியும் யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாவார்.
பொருளடக்கம் |
வாழ்க்கைக் குறிப்பு [தொகு]
யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட ரவிராஜ் சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரி மற்றும் யாழ் பரி யோவான் கல்லூரிகளில் கல்வி கற்றார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் 1987 ஆம் ஆண்டு இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பதிவு செய்தார். ரவிராஜின் "ரவிராஜ் அசோசியேட்ஸ்" எனும் சட்ட நிறுவனமானது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்குகள், அவசரகாலச் சட்டத்தின் கீழான வழக்குகளுக்காக வாதாடியது. கொழும்பில் மனித உரிமைகள் சட்டத்தரணியாகவும் பணியாற்றினார்.
அரசியலில் இணைவு [தொகு]
ரவிராஜ் சட்டத்தரணியாக இருந்து அரசியலில் நுழைந்தார். 1984 முதல் 1990 வரையிலும் 1993 முதல் 1997 வரையிலும் மனித உரிமைகள் இல்லத்தை நடத்தினார். 1987 இல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில் இணைந்தார். 1990 ஆம் ஆண்டு அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரானார்.
1997 ஆம் ஆண்டு யாழ். மாநகரசபை பிரதி முதல்வராகவும், 1998 இல் யாழ். மாநகரசபை முதல்வராகவும் தெரிவானார்.
2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தென்மராட்சி பகுதியில் போட்டியிட்டு இருமுறையும் வெற்றி பெற்றார்.
மறைவு [தொகு]
நவம்பர் 10, 2006 வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் ரவிராஜ் கொழும்பு நாரகேன்பிட்டிய மனிங்ரவுனில் உள்ள அவரது வீட்டுக்கருகில் அவர் மீது இனந்தெரியாதோரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவிராஜ் சிகிச்சை பலனின்றி காலை 9.20 மணிக்கு உயிரிழந்தார்.
மாமனிதர் விருது [தொகு]
தமிழீழத்தின் அதியுயர் தேசிய விருதான மாமனிதர் விருது வழங்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் கௌரவித்துள்ளார்.
பங்களிப்பு [தொகு]
இவர் தென்மராட்சி பகுதியில் தேர்தலில் வெற்றி ஈட்டியதன் காரணமாக, அப் பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு வீதி புனரமைப்பு மற்றும் மின்சார புனரமைப்பு போன்றவை இவரின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை அரசினால் மேல்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக தென்மராட்சியின் பல சிறிய கிராமங்கள் வளர்ச்சி அடைய காரணமாயிருந்தன.
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]
- இலங்கை அரசியல்வாதிகள்
- இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள்
- மாமனிதர் விருது பெற்றவர்கள்
- இலங்கையில் கொலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள்
- 1962 பிறப்புகள்
- 2006 இறப்புகள்
- தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்
- கொலை செய்யப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்
- இலங்கையின் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்
- இலங்கையின் 12வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசியல்வாதிகள்
