ஏப்ரல் 19
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | ஏப்ரல் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||
| MMXIII | ||||||
ஏப்ரல் 19 கிரிகோரியன் ஆண்டின் 109ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 110ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 256 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1587 - ஸ்பானிய போர்க் கப்பலை சேர் பிரான்சிஸ் டிரேக் மூழ்கடித்தார்.
- 1775 - அமெரிக்கப் புரட்சிப் போர் ஆரம்பித்தது.
- 1810 - வெனிசுவேலாவில் இராணுவ ஆட்சி நிறுவப்பட்டது.
- 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: மேரிலாந்தின் பால்ட்டிமோர் நகரில் கூட்டமைப்பின் ஆதரவாளர்களினார் ஐக்கிய அமெரிக்கப் படைகள் தாக்கப்பட்டனர். நான்கு படையினரும் 12 பொது மக்களும் கொல்லப்பட்டனர்.
- 1892 - ஐக்கிய அமெரிக்காவில் முதன் முதலில் தானுந்து ஒன்றை சார்ல்ஸ் டூரியா என்பவர் மசாசுசெட்சில் ஸ்ப்றிங்ஃபீல்ட் என்ற இடத்தில் செலுத்தினார்.
- 1902 - குவாத்தமாலாவில் 7.5 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியதில் 2,000 பேர் இறந்தனர்.
- 1904 - கனடாவின் டொரோண்டோ நகரத்தின் பெரும் பகுதிகள் தீயினால் அழிந்தது.
- 1928 - ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியின் 125வதும் கடைசியுமான தொகுதி வெளிவந்தது.
- 1936 - பாலஸ்தீனர்களின் ஆங்கிலேயர்களுக்கெதிரான முதலாவது கிளர்ச்சி தொடங்கப்பட்டது.
- 1954 - உருது, மற்றும் வங்காள மொழி ஆகியன பாகிஸ்தானின் தேசிய மொழிகளாக அறிவிக்கப்பட்டன.
- 1971 - முதலாவது விண்வெளி ஆய்வுகூடமான சோவியத் ஒன்றியத்தின் சல்யூட் 1 விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
- 1975 - இந்தியாவின் முதலாவது செய்மதி ஆரியபட்டா விண்ணுக்கு ஏவப்பட்டது.
- 1988 - அன்னை பூபதி மட்டக்களப்பில் ஆக்கிரமிப்பாளருக்கெதிராக உண்ணா நோன்பிருந்து இறந்தார்.
- 1989 - அமெரிக்காவின் அயோவா என்ற கப்பலில் பீரங்கி மேடை ஒன்று வெடித்ததில் 47 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
- 1993 - ஐக்கிய அமெரிக்கா, டெக்சாசில் டாவீடீயன் என்ற மதக்குழு ஒன்றின் கட்டிடத்தை 51 நாட்களாக சுற்றி வளைத்த அமெரிக்க FBIஇன் முற்றுகை கட்டிடம் தீப்பற்றியதில் முடிவுக்கு வந்தது. 81 பேர் கொல்லப்பட்டனர்.
- 1995 - அமெரிக்காவின் ஓக்லகாமா நகரத்தில் நடுவண் அரசுக் கட்டிடம் ஒன்று தீவிரவாதிகளின் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானாதில் 168 பேர் கொல்லப்பட்டனர்.
- 1995 - சந்திரிகா - விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை முறிவடைந்ததாக விடுதலைப் புலிகள் அறிவித்தனர். அதனை அடுத்து திருகோணமலைத் துறைமுகத்தில் இரண்டு பீரங்கிக் கப்பல்கள் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டன.
- 1999 - ஜெர்மனியின் நாடாளுமன்றம் பெர்லின் நகருக்கு மாற்றப்பட்டது.
- 2006 - நேபாளத்தில் மன்னராட்சியை எதிர்த்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிறப்புகள் [தொகு]
- 1832 - ஜொசே ஐசாகிர், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (இ. 1916)
- 1912 - கிளென் சீபோர்க், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (இ. 1999)
- 1957 - முகேஷ் அம்பானி, இந்தியாவின் தொழிலதிபர்
இறப்புகள் [தொகு]
- 1882 - சார்ள்ஸ் டார்வின், பரிணாமக் கோட்பாட்டைக் கண்டுபிடித்தவர் (பி. 1809)
- 1906 - பியரி கியூரி, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1859)
- 1988 - அன்னை பூபதி, ஈழத்தில் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்தவர் (பி. 1932)
- 1998 - ஒக்டாவியோ பாஸ், நோபல் பரிசு பெற்ற மெக்சிக்கோ எழுத்தாளர் (பி. 1914)
- 2013 - சிவந்தி ஆதித்தன் தினத்தந்தி உரிமையாளர் (பி. 1936)
- 2013 - செ. குப்புசாமி தொழிற்சங்கத் தலைவர் (பி. 1926)
சிறப்பு நாள் [தொகு]
- தமிழ் ஈழம் - நாட்டுப்பற்றாளர் நாள்
- சியெரா லியொன் - குடியரசு நாள் (1971)