செப்டம்பர் 13
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | செப்டம்பர் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | |||||
| MMXIII | ||||||
செப்டம்பர் 13 கிரிகோரியன் ஆண்டின் 256வது நாளாகும். நெட்டாண்டுகளில் 257வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 109 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள்[தொகு]
- 1503 - மைக்கலாஞ்சலோ புகழ்பெற்ற டேவிட் என்ற சிலையை உருவாக்கும் பணிகளை ஆரம்பித்தார்.
- 1609 - ஹென்றி ஹட்சன் பின்னர் ஹட்சன் ஆறு எனப் பெயரிடப்பட்ட ஆற்றை அடைந்தார்.
- 1759 - கனடாவின் கியூபெக் நகருக்கருகாமையில் இடம்பெற்ற போரில் பிரித்தானியப் படைகள் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தன.
- 1788 - நியூயோர்க் நகரம் ஐக்கிய அமெரிக்காவின் தற்காலிக தலைநகராக அறிவிக்கப்பட்டது.
- 1791 - பதினாறாம் லூயி மன்னன் பிரான்சின் புதிய அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டான்.
- 1814 - பிரித்தானியர் மேரிலாந்தின் பால்ட்டிமோர் நகரைக் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வியடைந்தது.
- 1847 - மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: அமெரிக்கப் படையினர் மெக்சிக்கோ நகரைக் கைப்பற்றினர்.
- 1898 - ஹனிபல் குட்வின் செலுலோயிட் புகைப்படச் சுருளைக் கண்டுபிடித்தார்.
- 1914 - முதலாம் உலகப் போர்: தென்னாபிரிக்கப் படையினர் ஜெர்மனியின் நமீபியா மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.
- 1923 - ஸ்பெயினில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மிகுவேல் பிறிமோ டி ரிவேரா ஆட்சியைக் கைப்பற்றினான்.
- 1939 - கனடா இரண்டாம் உலகப்போரில் குதித்தது.
- 1940 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலி எகிப்தினுள் நுழைந்தது.
- 1940 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் குண்டுகள் பக்கிங்ஹாம் அரண்மனையைச் சேதப்படுத்தியது.
- 1943 - சியாங் காய் ஷேக் சீனக் குடியரசின் அதிபரானார்.
- 1948 - இந்தியப் படைகள் ஐதராபாத்தை இந்திய ஆளுமையின் கீழ் கொண்டு வந்தன.
- 1949 - இலங்கை, இத்தாலி பின்லாந்து, ஐஸ்லாந்து, ஜோர்தான் ஆகிய 6 நாடுகள் ஐநாவில் அங்கத்துவம் பெற சோவியத் ஒன்றியம் தடை செய்தது.
- 1953 - நிக்கிட்டா குருஷேவ் நாட்டின் உயர் பதவியான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார்.
- 1968 - அல்பேனியா வார்சா ஒப்பந்தத்தில் இருந்து விலகியது.
- 1971 - நியூயோர்க்கில் சிறைக்கைதிகளின் கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த காவற்துறையினர் எடுத்த நடவடிக்கையில் 42 பேர் கொல்லப்பட்டனர்.
- 1989 - தென்னாபிரிக்காவில் நிறவெறிக்கெதிரான மாபெரும் போராட்டம் டெஸ்மண்ட் டூட்டு தலைமையில் இடம்பெற்றது.
- 1993 – நோர்வேயில் இடம்பெற்ற இரகசியத் தொடர்ப் பேச்சுவார்த்தைகளை அடுத்து பாலஸ்தீனத் தலைவர் யாசர் அரபாத்துக்கும் இஸ்ரேலியப் பிரதமர் இட்சாக் ரபீனுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டது.
- 1994 - யுலிசெஸ் விண்கலம் சூரியனின் தென் முனையைக் கடந்தது.
- 1999 - மாஸ்கோவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 119 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள்[தொகு]
- 1916 - ரூவால் டால், எழுத்தாளர் (இ. 1990)
- 1969 - ஷேன் வோர்ன், ஆஸ்திரேலியத் துடுப்பாளர்
இறப்புகள்[தொகு]
- 1598 - இரண்டாம் பிலிப்பு, ஸ்பானிய, போர்த்துக்கல், இலங்கை மன்னன் (பி. 1526)
- 1996 - டூப்பாக் ஷகூர், அமெரிக்க ராப் இசைக் கலைஞர் (பி. 1971)
- 2009 - அரங்க முருகையன், தமிழறிஞர், எழுத்தாளர் (பி. 1932)