மே 6
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| << | மே 2008 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
| MMVIII | ||||||
மே 6 கிரிகோரியன் ஆண்டின் 126ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 127ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 239 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1527 - ஸ்பானிய, மற்றும் ஜெர்மனியப் படைகள் ரோம் நகரைச் சூறையாடினர். 147 சுவீடன் படைகள் புனித ரோமப் பேரரசின் மன்னன் ஐந்தாம் சார்ள்சிற்கு எதிராகப் போரிட்டு இறந்தனர்.
- 1542 - பிரான்சிஸ் சேவியர் கோவாவை அடைந்தார்.
- 1682 - பிரான்சின் பதினான்காம் லூயி மன்னன் தனது கோட்டையை வேர்சாய் நகருக்கு மாற்றினான்.
- 1757 - பிரெடெரிக் தலைமையிலான புரூசியப் படைகள் ஆஸ்திரிய இராணுவத்தைத் தோற்கடித்து பிராக் நகரை முற்றுகையிட்டனர்.
- 1840 - பென்னி பிளாக் அஞ்சற்தலை ஐக்கிய இராச்சியத்தில் (அயர்லாந்து உட்பட) பயன்படுத்த அநுமதிக்கப்பட்டது.
- 1853 - "த லிட்டரறி மிரர்" (The Literary Mirror) என்னும் ஆங்கில மாதிகையை யாழ்ப்பாணத்தில் வைமன் கதிரவேற்பிள்ளை ஆரம்பித்தார்.
- 1854 - இந்தியாவில் முதல் தபால் தலை வெளியிடப்பட்டது.
- 1857 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் 34வது இராணுவப் பிரிவு தனது அலுவலர்களைப் பாதுகாக்கத் தவறியமைக்காக கலைக்கப்பட்டது. இப்பிரிவின் மங்கள் பாண்டே என்ற சிப்பாய் தனது மேலதிகாரிகளுக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டு ஏப்ரல் 8 இல் தூக்கிலிடப்பட்டான்.
- 1860 - கரிபால்டி தனது தொண்டர் படைகளுடன் இரண்டு சிசிலிகளின் பேரரசைக் கைப்பற்றுவதற்காக ஜெனோவாவில் இருந்து புறப்பட்டான்.
- 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஆர்கன்சஸ் அமெரிக்கக் கூட்டணியில் இருந்து விலகியது.
- 1889 - ஈபெல் கோபுரம் பாரிசில் பொதுமக்களுக்காக அதிகாரபூர்வமாகத் திறந்துவிடப்பட்டது.
- 1910 - ஐந்தாம் ஜோர்ஜ் ஐக்கிய இராச்சியத்தின் மன்னனாக முடி சூடினான்.
- 1930 - இரானில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 4,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1937 - ஜெர்மனியின் ஹின்டென்பேர்க் என்ற வான்கப்பல் (zeppelin) நியூ ஜெர்சியில் தீப்பிடித்து அழிந்தது.
- 1942 - இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சில் நிலை கொண்டிருந்த கடைசி அமெரிக்கப் படைகள் ஜப்பானிடம் சரணடைந்தனர்.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: கிழக்கு ஐரோப்பாவின் கடைசிப் பெரும் சமர் பிராக் நகரில் ஆரம்பமானது.
- 1967 - சாகிர் உசேன் இந்தியாவின் முதல் முஸ்லிம் குடியரசுத் தலைவரானார்.
- 1976 - இத்தாலியின் ஃபிறியூல் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 989 பேர் கொல்லப்பட்டனர்.
- 1994 - ஐக்கிய இராச்சியத்தையும் பிரான்சையும் இணைக்கும் கால்வாய் சுரங்கம் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
- 2001 - சிரியாவுக்கான தனது பயணத்தில் பாப்பரசர் அருளப்பர் சின்னப்பர் II மசூதி ஒன்றிற்கு சென்றார். மசூதிக்குச்சென்ற முதலாவது பாப்பரசர் இவரேயாவார்.
[தொகு] பிறப்புக்கள்
- 1861 - மோதிலால் நேரு, இந்திய விடுதலை வீரர் (இ. 1931)
- 1904 - ஹரி மார்ட்டின்சன், சுவீடன் எழுத்தாளர் (இ. 1978)
- 1953 - டோனி ப்ளேர், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்
- 1985 - கிரிஸ் பால், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
[தொகு] இறப்புகள்
- 1952 - மரியா மாண்ட்டிசோரி, இத்தாலிய கல்வியாளர், மனோதத்துவ மருத்துவர் (பி. 1870)

