மோதிலால் நேரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பண்டித் மோதிலால் நேரு


காங்கிரஸ் தலைவர்
பதவியில்
1919 – 1920
முன்னவர் சையத் ஹாசன் இமாம்
பின்வந்தவர் லாலா லஜபத் ராய்

காங்கிரஸ் தலைவர்
பதவியில்
1928 – 1929
முன்னவர் முக்தர் ஹமீத் அன்சாரி
பின்வந்தவர் ஜவகர்லால் நேரு
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு

தேசியம் இந்தியா
தொழில் வழக்கறிஞர், இந்தியச் சுதந்திர போராளி
சமயம் இந்து

மோதிலால் நேரு (6 மே 1861 – 6 பிப்ரவரி 1931) ஒரு இந்தியச் சுதந்திர போராட்ட வீரரும், வழக்கறிஞரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவராக 1919–1920 மற்றும் 1928–1929 என இரண்டு முறை பதவி வகித்துள்ளார். இந்தியாவின் பெரிய அரசியல் குடும்பமான நேரு-காந்தி குடும்பத்தின் முன்னோடியாவார். இவர் முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவின் தந்தையும் ஆவார்.

அரசியல்[தொகு]

தனது குடும்பத்தினருடன் நடுவில் அமைர்ந்திருக்கும் மோதிலால் நேரு

காஷ்மீர் பண்டித் குடும்பத்தில் பிறந்த மோதிலால் அக்கால ஜெய்ப்பூர் மாநிலத்தில் வசித்துவந்தார். இவரது தாத்தா லெட்சுமிநாராயண், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் முகலாயப் பேரரசு நீதிமன்றத்தில் வழக்கறிஞராயிருந்தவர். இவரது தந்தை கங்காதர் நேரு டெல்லியில் காவலராகயிருந்தவர். கேம்பிரிச் பல்கலைக்கழகத்தில் பார் அட் லா என்ற வழக்கறிஞர் பட்டம் பெற்றார். மகாத்மா காந்தியின் ஈர்ப்பால் 1918ல் இந்திய தேசிய காங்கிரசுக் கட்சியில் இணைந்தார். பின்னர் சுயாட்சிக் கட்சியில் இணைந்து பிரித்தானிய அரசுக்கெதிராய் போராடினார். சைமன் குழுவிடம் பேச்சு நடத்த 1928ல் அமைக்கப்பட்ட நேரு குழுவின் தலைவராகயிருந்தவர்.

குடும்பம்[தொகு]

இவரது துணைவியார் பெயர் சொருப் ராணி ஆகும். 1889ல் ஜவகர்லால் நேரு என்ற ஒரு புதல்வரும், 1900ல் பிறந்த விஜயலட்சுமி பண்டிட் மற்றும் 1907ல் பிறந்த கிருஷ்ண ஹுதீசிங் என்ற இரு புதல்விகளும் இவருக்குண்டு.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மோதிலால்_நேரு&oldid=1373360" இருந்து மீள்விக்கப்பட்டது