சாகீர் உசேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சாகிர் உசேன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜாகிர் ஹுசைன்
زاکِر حسین


பதவியில்
13 மே 1967 – 3 மே 1969
பிரதமர் இந்திரா காந்தி
உதவி தலைவர் வி. வி. கிரி
முன்னவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
பின்வந்தவர் வி. வி. கிரி

பதவியில்
13 மே 1962 – 12 மே 1967
குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
முன்னவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
பின்வந்தவர் வி. வி. கிரி

பதவியில்
6 ஜூலை 1957 – 11 மே 1962
முன்னவர் ஆர்.ஆர் திவாகர்
பின்வந்தவர் மாதாபுசி அனந்தசயனம் அய்யங்கார்
அரசியல் கட்சி சுயேட்சை

பிறப்பு பெப்ரவரி 8, 1897(1897-02-08)
ஐதராபாத்
இறப்பு மே 3 1969 (அகவை 72)
புது தில்லி
வாழ்க்கைத்
துணை
சாஜகான் பேகம்
சமயம் இஸ்லாம்

சாகிர் உசேன் (Zakir Hussain, இந்த ஒலிக்கோப்பு பற்றி கேட்க, உருது: ذاکِر حسین, தெலுங்கு: జాకీర్ హుస్సైన్); 8 பெப்ரவரி 1897 - 3 மே 1969) இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1967இல் இருந்து 1969 இல் அவர் இறக்கும் வரை அப்பதவியை வகித்தார். 1962-1967 காலத்தில் இவர் துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்தார்.

இவர் கல்வித்துறையில் சிறந்த அறிஞராகவும் திறமைமிக்க நிருவாகியாகவும் விளங்கினார். ஆந்திர மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்தில் 1897 பெப்ரவரி 8 ஆம் நாள் அவர் பிறந்தார்.[1][2][3] உத்தரப் பிரதேசத்திலுள்ள எடவா என்ற ஊரில் உயர்நிலைக் கல்வி கற்றார். அலிகார் முஸ்லிம் பலகலைக் கழகத்தில் பட்டம் பெற்றார். பின் செருமானியிலுள்ள பெர்லின் பல்கலைக் கழகத்தில் பயின்று முனைவர் பட்டம் பெற்றார்.

அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் மாணவராக இருந்தபோது , காந்தியடிகளின் தீவிர பற்றாளரானார். காந்தியடிகளின் ஆதாரக் கல்விமுறை இவரை மிகவும் கவர்ந்த்து. கல்வித்துறையில் அவர் பணியாற்றியபோது ஆதாரக் கல்விமுறையினை நாடெங்கும் பரப்ப அரும்பாடுபட்டார்.

இந்தியநாட்டின் தலைநகரான டெல்லியில் அமைந்துள்ள ஜமியா மில்லியா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக 1926 முதல் 1948 வரை பணியாற்றினார். அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகவும் எட்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்கள். பீகார் மாநிலத்தின் ஆளுநராகவும்இருந்தார். 1962 ல் மே மாதத்தில் இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்வுபெற்றார். 1967 ல் இந்திய குடியரசுத் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். உரண்டு ஆண்டுகளே அப்பதவியிலிருந்த அவர் 1969 மே மாதம் 3 ஆம் நாள் காலமானார்.

ஜாகிர் ஹுசேன், இந்திய அரசின் உயர்நில்க் கல்வி வாரியத்தின் தலைவராக இருந்து ,இயர்நிலைக் கல்விச் சீர்திருத்தத்திற்கான பலதிட்டங்களை வகுத்துக் கொடுத்தார். சர்வதேசக் கல்வ நிறுவனங்கள் பலவற்றுடன் தொடர்பு கொண்டிருந்தார்.யுடெஸ்கோ நிருவாக வாரியத்தின் உறுப்பினராகப் பணியாற்றினார். அவர் ஆங்கிலம் இந்தி, உருது ஆகிய மொழிகளில் சிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும்விளங்கினார்.இம்மூன்று மொழிகளிலும் ஆதாரக்கல்விமுறைகுறித்தும் கல்வி வளர்ச்சி பற்றியும்பல நூல்கள் எழுதியுள்ளார். பிளேட்டோவின் குடியரசு என்ற நூலை உருது மொழியில் மொழிமாற்றம் செய்துள்ளார்.

கல்வித் துறையில் இவர் ஆற்றியத் அருந்தொண்டினைப் பாராட்டி ,இந்திய அரசு இவருக்கு 1954 ல் பத்ம விபூஷண் எனும் விருதினை வழங்கிப் பாராட்டியது. 1963-ல் நாட்டில் மிக உயர்ந்த விருதாகிய பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பித்தது. டெல்லி, கல்கத்தா, அலகபாத், அலிகார், கெய்ரோ ஆகிய பல்கலைக் கழகங்கள் இவருக்கு இலக்கிய மேதை பட்டம் வழங்கிச் சிறப்பித்தன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Zakir Husain, Encyclopædia Britannica Online, 12 February 2012, http://www.britannica.com/EBchecked/topic/277416/Zakir-Husain, பார்த்த நாள்: 13 May 2012 
  2. "History under threat". The Hindu. 10 October 2011. http://www.thehindu.com/news/cities/Hyderabad/article2524995.ece. பார்த்த நாள்: 10 December 2012. 
  3. Sharma, Vishwamitra (2007). Famous Indians of the 21st century. Pustak Mahal. p. 60. ISBN 81-223-0829-5. Retrieved 18 September 2010
  • குழந்தைகள் கலைக்களஞ்சியம்-தமிழ் வளர்ச்சிக் கழகம்
"http://ta.wikipedia.org/w/index.php?title=சாகீர்_உசேன்&oldid=1617343" இருந்து மீள்விக்கப்பட்டது