ஜூன் 7
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சூன் 7 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| << | சூன் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | ||||||
| MMXIII | ||||||
ஜூன் 7 கிரிகோரியன் ஆண்டின் 158ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 159ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 207 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள்[தொகு]
- 1099 - முதலாவது சிலுவைப் போர்: ஜெருசலேம் மீதான தாக்குதல் ஆரம்பமானது.
- 1494 - ஸ்பெயினும் போர்த்துக்கல்லும் தாம் கண்டுபிடித்த புதிய உலகத்தைத் தமக்கிடையே பகிர்ந்து கொள்ள உடன்பாட்டை எட்டினர்.
- 1654 - பதினான்காம் லூயி பிரான்சின் மன்னனாக முடிசூடினான்.
- 1692 - ஜமெய்க்காவில் மூன்றே நிமிடங்கள் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1600 பேர் கொல்லப்பட்டனர்.
- 1832 - கனடாவில் கியூபெக்கில் ஐரிய குடியேறிகளால் கொண்டுவரப்பட்ட கொள்ளை நோய் காரணமாக 6,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
- 1863 - மெக்சிக்கோ நகரம் பிரெஞ்சுப் படையினரால் கைப்பற்றப்பட்டது.
- 1893 - மகாத்மா காந்தி தனது முதலாவது ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தார்.
- 1905 - நோர்வே சுவீடனுடனான தொடர்புகளைத் துண்டித்தது.
- 1917 - முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தில் மெசைன் என்ற இடத்தில் 10,000 ஜெர்மனியப் படையினர் கொல்லப்பட்டனர்.
- 1944 - இரண்டாம் உலகப் போர்: நோமண்டி சண்டையில் 23 கனேடிய போர்க்கைதிகளை நாசிப் படைகள் கொன்றனர்.
- 1967 - இசுரேலியப் படைகள் ஜெருசலேம் நகரினுள் நுழைந்தனர்.
- 1981 - இஸ்ரேலிய வானூர்திகள் ஈராக்கின் ஒசிராக் அணுக்கரு உலை மீது குண்டு வீசித் தாக்கி அழித்தன.
- 1989 - சுரினாமில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 168 பேர் கொல்லப்பட்டனர்.
- 1991 - பிலிப்பீன்சில் பினடூபோ எரிமலை வெடித்து 7 கிமீ உயாரத்துக்கு அதன் தூசிகள் பறந்தன.
- 2000 - கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அமைச்சர் சி. வி. குணரத்ன மற்றும் தெகிவளை மாநகர உதவி மேயர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
- 2006 - மட்டக்களப்பு மாவட்டத்தில் நெடுங்கல் கிராமத்தில் இடம்பெற்ற கண்ணிவெடியில் சிக்கி 6 மாதக் குழந்தை உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.
- 2007 - கொழும்பு விடுதிகளில் இருந்து தமிழர் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
பிறப்புகள்[தொகு]
- 1974 - மகேஷ் பூபதி, இந்திய டென்னிஸ் ஆட்டக்காரர்
- 1975 - ஏலன் ஐவர்சன், அமெரிக்காவின் கூடைப்பந்து ஆட்டக்காரர்
இறப்புகள்[தொகு]
- 1906 - பொன்னம்பலம் குமாரசுவாமி, இலங்கையின் சட்டசபை உறுப்பினர் (பி. 1849)
- 1964 - ஆறுமுகம் ஆச்சாரியார், யாழ்ப்பாணம் திருநெல்வேலியைச் சேர்ந்த சிற்பாசிரியர் (பி. 1890)