மார்ச் 31
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மார்ச்சு 31 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| << | மார்ச் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||
| MMXIII | ||||||
மார்ச் 31 கிரிகோரியன் ஆண்டின் 90ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 91ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 275 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1492 - ஸ்பெயினில் இருந்து அனைத்து 150,000 யூதர்களும் ரோமன் கத்தோலிக்கராக மாற வேண்டும் அல்லது அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்ற உத்தரவை இசபெல்லா மாகாராணி பிறப்பித்தார்.
- 1866 - சிலியின் வல்பரைசோ துறைமுகம் ஸ்பானிய கடற்படையின் குண்டுத் தாக்குதலுக்குள்ளானது.
- 1885 - இலங்கையில் தமிழ், சிங்கள, இஸ்லாமிய வருடப் பிறப்பு நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டது.
- 1889 - ஈபெல் கோபுரம் தொடக்க விழா கொண்டாடப்பட்டது.
- 1909 - பொசுனியா எர்செகோவினா மீதான ஆஸ்திரியாவின் கட்டுப்பாட்டை சேர்பியா ஏற்றுக் கொண்டது.
- 1917 - ஐக்கிய அமெரிக்கா டானிஷ் மேற்கிந்தியத் தீவுகளை டென்மார்க்கிடம் இருந்து $25 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்குக் கொள்வனவு செய்து அமெரிக்க கன்னித் தீவுகள் எனப் பெயர் மாற்றியது.
- 1918 - ஐக்கிய அமெரிக்காவில் பகலொளி சேமிப்பு நேரம் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1931 - நிக்கரகுவாவின் தலைநகரமான மனாகுவாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 2,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- 1942 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர்கள் கிறிஸ்துமஸ் தீவை பிரித்தானியாவிடம் இருந்து கைப்பற்றியது.
- 1951 - யூனிவாக் 1 என்ற முதலாவது ஐக்கிய அமெரிக்காவின் வர்த்தகக் கணினி அந்நாட்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நிறுவனத்துக்கு தரப்பட்டது.
- 1959 - திபெத்தின் 14வது தலாய் லாமா, டென்சின் கியாட்சோ, எல்லையைக் கடந்து இந்தியாவினுள் நுழைந்து அரசியல் தஞ்சம் கோரினார்.
- 1966 - சோவியத்தின் லூனா 10 விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. இதுவே சந்திரனின் சுற்றுவட்டத்தை வலம் வந்த முதலாவது விண்கலமாகும்.
- 1970 - 12 ஆண்டுகள் விண்வெளியில் இருந்து விட்டு எக்ஸ்புளோரர் 1 புவியின் வளிமண்டலத்துள் வந்தது.
- 1979 - கடைசி பிரித்தானியப் படையினர் மோல்ட்டாவை விட்டு விலகினர். மோல்ட்டா விடுதலையை அறிவித்தது.
- 1990 - இந்திய அமைதிப் படை ஈழத்தில் இருந்து முற்றாக விலக்கப்பட்டது.
- 2004 - கூகிள் 1 ஜிகா பைட் கொள்ளளவுள்ளதான ஜிமெயிலை அறிவித்தது.
- 2007 - முதலாவது புவி மணி நிகழ்வு சிட்னியில் இடம்பெற்றது.
பிறப்புக்கள் [தொகு]
- 1596 - ரேனே டெஸ்கார்ட்டஸ், தத்துவ ஞானி, கணித மேதை (இ. 1650)
- 1732 - ஜோசப் ஹேடன், மேற்கத்திய இசையறிஞர் (இ. 1809)
- 1890 - வில்லியம் பிராக், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர் (இ. 1971)
- 1898-சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம், இலங்கைத் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தவர் (இ. 1977)
- 1906 - Sin-Itiro Tomonaga, நோபல் பரிசு பெற்ற ஜப்பானியர் (இ. 1979)
- 1914 - ஒக்டாவியோ பாஸ், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (இ. 1998)
- 1928 - இராம.அரங்கண்ணல், தமிழக எழுத்தாளர், திரைப்படதயாரிப்பாளர்
- 1934 - கார்லோ ரூபியா, நோபல் பரிசு பெற்ற இத்தாலியர்
இறப்புக்கள் [தொகு]
- 1727 (ஜோர்ஜியன் நாட்காட்டியில்) - ஐசாக் நியூட்டன், அறிவியலாளர் (பி. 1643)
- 1861 - ஹென்றி மார்ட்டின், ஈழத்தின் தமிழ் எழுத்தாளர், ஓவியர், மதப் பிரசாரகர்.
- 1917 - எமில் பேஹ்ரிங், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (பி. 1854)
- 1945 - ஹான்ஸ் ஃபீஷர், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (பி. 1881)
- 2001 - கிளீஃபோர்ட் ஷல், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1915)