யோகான் செபாஸ்தியன் பாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யோகான் செபாஸ்தியன் பாக்
Johann Sebastian Bach Edit on Wikidata
பிறப்பு21 மார்ச்சு 1685 (in Julian calendar)
Eisenach
திருமுழுக்கு23 மார்ச்சு 1685 (in Julian calendar)
இறப்பு28 சூலை 1750 (அகவை 65)
லைப்சிக்
கல்லறைSt. Thomas Church
பணிஇசையமைப்பாளர், organist, harpsichordist, வயலின் வாசிப்பவர், இசை நடத்துநர், choir director, virtuoso
வேலை வழங்குபவர்
  • Collegium Musicum
  • Johann Ernst III, Duke of Saxe-Weimar
சிறப்புப் பணிகள்See Bach-Compendium, Neue Bach-Ausgabe, பாக்கின் படைப்புப் பட்டியல், list of compositions by Johann Sebastian Bach
பாணிBaroque music
வாழ்க்கைத்
துணை/கள்
Anna Magdalena Bach, Maria Barbara Bach
குழந்தைகள்Elisabeth Juliana Friderica Bach, Johann Christoph Bach, Regina Susanna Bach
கையெழுத்து

யோகான் செபாஸ்தியன் பாக் அல்லது யோஃகான் செபாஸ்தியன் பாஃக் (Johann Sebastian Bach - 31 மார்ச் 1685 [O.S. 21 மார்ச்] – 28 ஜூலை 1750) ஒரு ஜெர்மானிய இசையமைப்பாளரும் ஆர்கன் இசைக் கலைஞரும் ஆவார். இவரது இசை மதம் சார்ந்ததும், மதச்சார்பற்றதுமான ஆக்கங்கள் பரோக் காலக் கலையின் அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைத்து அதனை முதிர் நிலைக்குக் கொண்டுவந்தது. இவர் புதிய இசை வடிவங்கள் எதையும் அறிமுகப்படுத்தவில்லை எனினும் ஏற்கனவே இருக்கும் ஜேர்மன் இசைப் பாணியை தனது வலுவான இசை நுட்பங்களின் வாயிலாக வளம்படுத்தினார். இவரது அறிவாற்றலின் ஆழம், தொழில்நுட்பக் கட்டுப்பாடு, கலையழகு என்பவற்றுக்காக பாக் பெரிதும் மதிக்கப்பட்டார்.

இவரது வாழ்க்கைக் காலத்தில் ஒரு ஆர்கன் இசைக் கலைஞராகவே இவர் பெரும் புகழ் பெற்றிருந்தார். ஒரு இசையமைப்பாளராக இவர் அதிகம் அறியப்பட்டிருக்கவில்லை. பரோக் பாணியும் இவர் பின்பற்றிய பிற நுட்பங்களும் காரணமாக இவர் பழம் பாணியைக் கடைப்பிடிக்கும் ஒருவர் என இவரது சமகாலத்தவர் கருதினர். குறிப்பாக இவரது தொழில் வாழ்வின் பிற்பகுதியில் ரோக்கோக்கோ பாணி, செந்நெறிப் பாணி என்பன விருப்பத்துக்குரிய போக்காக இருந்த வேளையில் இவரது இசையமைப்பு மக்களைக் கவரவில்லை. 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இவரது இசை நிகழ்ச்சிகள் குறித்த ஆர்வம் மீண்டும் ஏற்பட்டது. தற்போது, மேலைத்தேச இசைமரபின் மிகச் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக இவர் மதிக்கப்படுகிறார். இதுவரை உலகில் வாழ்ந்த மிகத் திறமைவாய்ந்த இசை மேதைகளில் ஒருவராகவும் இவர் கருதப்படுகிறார்.[1]

வாழ்க்கைக்குறிப்பு[தொகு]

யோகான் செபாஸ்தியன் பாக், எயசெனாக் என்ற ஜெர்மானிய பகுதியில், 21 மார்ச் 1685 இல் ஒரு சிறந்த இசை குடும்பத்தில் பிறந்நார். இவருடைய தந்தையார் யோகான் அம்ப்ரொசியஸ் பாக், அந்ந பகுதியின் இசை குழுமத்தின் தலைவராக விளங்கினார். இவருடைய பெற்றொரின் சகோதரர்களூம் இசைத் துறையில் சிறந்து விளங்கினர். யோகான் செபாஸ்தியன் பாக் கின் தந்தையார் இவருக்கு வயலின் மற்றும் harpsichord (தந்திகள் இறகினால் அல்லது தோல் ஊசிகளால் வருடப்படும் ஆணிப்பட்டையுள்ள முற்கால இசைக்கருவி வகை) ஆகிய கருவிகளை கற்றுக் கொடுத்ததுடன், சமகால இசையையும் அறிமுகப்படுத்தினார்.[2][3]

யோகான் செபாஸ்தியன் பாக் இன் தாயார் 1694 இல் மரணமடைந்தார். எட்டு மாதங்கள் கழித்து தன்னுடைய தந்தையாரையும் பாக் இழந்தார். தன்னுடைய 10 ஆவது வயதில், பெரிய தமயனார் யோகான் கிறிஸ்டொபர் பாக் (1671 - 1721) குடன், மிகெலிகிர்ஸெ விற்கு இடம் பெயர்ந்தார்.[4] அங்கே இசை கற்பதிலும், தன் சகோதரர் உட்பட பிற இசை அமைப்பாளர்களுக்கு இசைக்கோப்புகளை நகல் எடுப்பதிலும் ஈடுப்பட்டார்.[5][6] இங்கே, தன்னுடைய பெரிய தமயனார் யோகான் கிறிஸ்டொபர் பாக் கிடம், மிக முக்கியம் வாய்ந்த இசை பாடங்களை கற்றதுடன், clavichord என்னும் இசை கருவியிலும் பாடங்கள் கற்றார். பெரிய தமயனார் யோகான் கிறிஸ்டொபர் பாக் இவரை சமகால இசை அமைப்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவர்களில் Johann Pachelbel (இவரின் கீழ் பாக் கின் பெரிய தமயனார் யோகான் கிறிஸ்டொபர் பாக் இசை பயின்றார்),[2] Johann Jakob Froberger [3], Jean-Baptiste Lully, Louis Marchand, Marin Marais, Girolamo Frescobaldi ஆகியோர் குறிப்பிடத்தந்தவர்கள். மேலும் இந்தக் கால கட்டத்தில் தான் பாக் இறையியல், லத்தின், கிரேக்க மொழி, பிரெஞ்சு மொழி, இத்தாலிய மொழி ஆகியவற்றில் பாடம் கற்றார்.[7]

பாக் தன்னுடைய 14 ஆவது வயதில், தன்னுடைய பள்ளி தோழர் ஜார்ஜ் எர்ட்மென் னுடன், மிகவும் மதிப்பு வாய்ந்த லுன்பெர்க் கில் உள்ள புனித மிகெல் பள்ளியில் அனுமதிக்கப்பட்டார் [8]. உறுதியாக தெரியாவிட்டாலும் இந்த பயணத்திற்கு கால் நடையாக சென்றனர் என்று அறியப்படுகிறது[7]. இங்கு இருந்த இரண்டு வருடங்கள், பாக் கிர்கு ஐரோப்ப வாழ்க்கை முறையை நன்றாக அறிமுகப்படுத்தியது. இந்தக் கால கட்டத்தில் தான் பாக் கிற்கு வடக்கு ஜெர்மனியின் அரச குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுடன் தொடர்பு கிடைத்தது.

மிகச் சிறிய வரலாற்று ஆதாரங்களே இருந்தாலும், லுன்பெர்க் கில் உள்ள கால கட்டத்தில் லுன்பெர்க் புனித ஜார்ஜ் பள்ளியில் உள்ள ஜேஸ்பர் ஜோஃஅன்ஸன் உருவாக்கிய ஆர்கனை வாசித்து கேட்டதாகவும், பாக் கும் அதை வாசித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. பாக் கின் இசை மேதமையின் காரணமாக, அந்த கால கட்டத்தில் லுன்பெர்க் கில் உள்ள மிகச் சிறந்த ஆர்கன் இசை கலைஞர்களுடன் அவருக்கு தொடர்பு இருந்தது.[9]

ஜனவரி 1704 ஆம் ஆண்டு, லுன்பெர்க் கில் உள்ள புனித மிகெல் பள்ளியில் படிப்பை முடித்தப் பின்னர், சஃகர்ஹவுசன் னில் ஆர்கன் கலைஞர் வேலைக்கு நிராகரக்கப்பட்டு, பின்னர் வெய்மர் ரில் உள்ள யோவான் அர்ன்ஸ்ட் என்பவரின் அரச சபை இசை கலைஞராக நியமிக்கப்பட்டார்.[10] அவருடைய பொறுப்பு தெளிவாக தெரியாவிட்டாலும், மிகச் சிறிய அற்ப வேலைகளும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கலாம். இங்கு இருந்த ஏழு மாத காலத்தில் கீபோர்ட் இசை கலைஞராக அவர் புகழ் மிகவும் பரவியது.[11] ஆகஸ்ட் 1704 இல் புனித போனிபேஸ் தேவாலயத்தில் ஆர்கன் கலைஞர் வேலைக்கு நியமிக்கப்பட்டார். இங்கு இவருக்கு இலகுவான வேலைகளும், அதிக ஊதியமும் வழங்கப்பட்டது.

மிகச் சிறந்த இசை குடும்ப்பத்தில் இருந்து இவர் வந்திருந்தாலும், மற்றும் இசையில் ஆர்வம்முள்ள எஜமானரிடம் வேலை செய்தாலும், தேவாலய அதிகாரிகளுடன் இவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் 1705 - 1706 காலகட்டத்தில் பஃஷுதெ என்னும் புகழ் பெற்ற இசை கலைஞரை காண்பதற்காக பல மாதங்கள் விடுப்பு எடுத்துக்கொண்டார். இந்தப் பயணத்தை (250 மைல் தூரம்) இவர் கால் நடையாக மேற்கொண்டார். பஃஷுதெ சந்தித்ததன் முலம் பாக் கின் ஆரம்ப கால இசையில் இவருடய தாக்கம் அதிகமாக ஏற்பட்டது. பஃஷுதெ வின் காலத்திற்கு பிறகு அவர் பொறுப்பிற்கு வர ஆசைப் பட்ட பாக், பஃஷுதெ வின் மகளை திருமணம் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதால் அந்த எண்ண்ம் நிரைவேறாமல் போனது.[12]

1706 ஆம் ஆண்டு, புனித முஃஹாஸான் தேவாலயத்தில் ஆர்கன் கலைஞராக நியமிக்கப்பட்டார் இங்கு முன்பை விட அதிக ஊதியம், தேர்ந்த இசை கலைஞர்கள் மற்றும் நல்ல சூழ்நிலை இவருக்கு அமைநந்தது. புனித முஃஹாஸான் வந்த நான்கு மாதங்களுக்குப் பிறகு மரியா பார்பரா பாக் என்ற தனது உறவுக்கார பெண்மணியைத் திருமணம் புரிந்து கொண்டார். இவர்களுக்கு எழு குழந்தைகள் பிறந்தது. அதில் மூன்று குழந்தைகள் சிறு வயதில் இறந்துவிட்டன. உயிர் பிழைத்தவர்களில் வில்லியம் ப்ரிக்மன் பாக் மற்றும் கார்ல் பிலிப் இமானுவெல் பாக் பின்னாளில் மிகச் சிறந்த இசை கலைஞர்களாக விளங்கினர்.

1708 ஆம் ஆண்டு முஃஹாஸான் நகரிலிருந்து வெய்மர் நகருக்குத் திரும்பினார். 1715 ஆம் ஆண்டு பாக் தம்பதியனருக்கு முதல் குழந்தை பிறந்தது. வெய்மர் நகரிலிருந்த காலகட்டம் தான் அவருடைய இசை பயணத்தின் துவக்கமாக இருந்தது. இந்தக் காலகட்டத்தில் விவால்டி, கோரெலி, டொரெலி போன்ற இத்தாலிய இசை அமைப்பாளர்களின் இசையில் காணப்படும் புதிய யுக்திகளை தன் இசையில் கையாண்டார். தன்னுடைய மிகச் சிறந்த இசைகளில் சிலவற்றை இந்தக் காலகட்டத்தில் அவர் இயற்றி அவருடைய புகழ் பெற்ற இசை புத்தகமான Das Wohltemperierte Clavier என்பதில் அவை தொகுக்கப்பட்டது.[13]. வெய்மர் நகரில் சிறந்த இசை அமைப்பாளராக விளங்கிய பாக், 1717 ஆம் ஆண்டு, அந்த நகரத்தில் அவர் இசையின் மேல் இருந்த மதிப்பு குறைந்து, ஒரு மாத சிறை வாச நிகழ்விற்குப் பின் அந்த நகரின் இசைப் பொறுப்பில் இருந்து வெளியேற்றப்பட்டார்.[14]

1717 ஆம் ஆண்டு, லியோபோல்ட் என்னும் மன்னன், பாக் கை தன் சபையில் உயர்ந்த இசைப்பொறுப்பில் நியமிக்கப்பட்டார். லியோபோல்ட், ஒரு இசை கலைஞனானதால், பாக் கின் திறமையை உணர்ந்து அவருக்கு நல்ல ஊதியமூம், சுதந்திரமூம் அளித்தான். ஒரே ஆண்டு பிறந்து 80 மைல் தொலைவில் இருந்த இசையமைப்பாலர் ஹான்டல் அவர்களை பாக் ஒரு முறை கூட சந்தித்ததில்லை. 1719 ஆம் ஆண்டு பாக் இசையமைப்பாலர் ஹான்டல் லை சந்திக்கச் சென்ற பொழுது அவர் ஊரில் இல்லை. பின்பு 1730 ஆம் ஆண்டு, பாக் கின் மகன் ப்ரீட்மென் ஹான்டல் லை பாக் குடும்பத்தை பார்க்க அழைப்பு விடித்தார். ஆனால் அந்த சந்திப்பு நிகழவில்லை.[15]. ஜூலை 7, 1720 ஆம் ஆண்டு லியோபோல்ட்டுடன் பாக் வெளியுரில் இருந்த பொழுது அவருடைய முதல் மனைவி மரணமடைந்தார். ஒரு ஆண்டு கழித்து பாக், 3 டிசெம்பர் 1721 இல் அன்னா மஃடலினா வில்கெ என்ற பெண்னை திருமணம் புரிந்து கொண்டார்.[16] இவர் பாக் கை விட 17 வயது இளையவராவார். இவர்களுக்கு பதிமூன்று குழந்தைகள் பிறந்தது. அதில் எழு குழந்தைகள் சிறு வயதில் இறந்த விட்டன. பிழைத்தவற்களில் கோட்ப்ரிட் ஹெஇன்ரிச், யோகான் கிறிஸ்டொப் பிரெடரிக் பாக், யோகான் கிறிஸ்டியன் ஆகியோர் பின்னாளில் சிறந்த இசை கலைஞர்களாக விளங்கினர்.[16]

1723 ஆம் ஆண்டு, பாக் லீப்ஸிக் நகர தேவாலயங்களின் இசை குழு தலைவராக நியமிக்கப்பட்டார்.[17] இது சாஸொனி தொகுதியில் ஒரு மதிப்புமிக்க ஒரு பதவியாகும். இந்த பதவியை பாக் 27 ஆண்டுகள் தான் இறக்கும் வரை வைத்திருத்தார். இந்த பதவியின் மூலம் பாக் கிற்கு பல அரசியல் தொடர்புகள் கிடைத்தது.

1749 ஆம் ஆண்டு, பாக் கின் உடல் நிலை மோசமடைந்தது. 1750 ஆம் ஆண்டு, பாக் கின் கண் மிகவும் பாதிக்கப்பட்டதால், அந்த வருடம் மார்ச் அல்லது ஏப்ரில் மாதத்தில், பிரிட்டிஷ் கண் மருத்துவ நிபுணர் ஜான் டெய்லரால் கண் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.[18]

ஜுலை 28, 1750 ஆம் ஆண்டு, பாக் தன்னுடைய 65 ஆவது வயதில் இயற்கை எய்தினார். சமகால செய்திதாள் ஒன்று கண் அறுவைச் சிகிச்சை தோல்வியினாலே அவர் மரணம் அடைந்ததாக குறிப்பிட்டது.[19] நவீன வரலாற்று ஆசிரியர்கள் நிமொனியா மற்றும் இதய பிரச்சனையால் அவர் மரணம் அடைந்திருக்கலாம் என கூறிகிறார்கள்.[20][21][22] பாக் இறந்த பின் அவருடைய மகன் இமானுவெல் மற்றும் மாணவர் யோவான் பிரடரிக் அக்ரிகோலா அவருடைய இரங்கல் செய்தி வெளியிட்டனர்.[23]

பாக் முதலில் லீப்ஸிக் நகரில் உள்ள புனித ஜான் தேவாலயத்தில் உள்ள கல்லறையில் புதைக்கப்பட்டார். அவருடைய கல்லறை சுமார் 150 ஆண்டுகளுக்கு அடையாளம் காணபடாமல் இருந்தது. பின்னர் 1894 இல் புனித ஜான் தேவாலயத்திற்கு உள்ளே உள்ள ஒரு பெட்டகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த கட்டடம் இரண்டாம் உலகப் போரின் போது சேதம் அடைந்ததால் 1950 இல் பாக் கின் மிச்சங்கள் லீப்ஸிக் நகரில் உள்ள புனித தோமஸ் தேவாலயத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.[24]

மரபுப் பெருமை[தொகு]

பாக் இறந்து நாங்கு ஆண்டுகள் கழித்து 1754 இல் மிகவும் விரிவான இரங்கல் செய்தியானது லோரஸ் கிறிஸ்டொப் மிஸ்லர் என்னும் பாக் கின் முன்னால் மாணவரால் ஒரு இசையைப் பற்றிய இதழில் வெளியிடப்பட்டது. இந்த இரங்கல் செய்தியே பாக் கை பற்றி நம்பகத்தன்மையான ஆரம்ப காலகட்ட ஆதாரமாகும்.[25] பாக் மரணம் அடைந்த பின் இசை கலைஞராக அவருடைய பெருமை குறைத்து மதிப்பிடப்பட்டது; அவருடைய இசை பழமைத்தன்மை உடையதாக கருதப்பட்டது.[26] இந்தக் காலகட்டத்தில் அவர் இசை கருவி வாசிப்பவராகவும், இசை ஆசிரியராகவே கருதப்பட்டார்.

இறுதி 18 ஆம் நூற்றாண்டு இறுதியில் மற்றும் 19 ஆம் நூற்றாண்டு ஆரம்ப காலகட்டத்திலும், பாக் தன்னுடைய கிபோர்ட் வாசிக்கும் திறமைக்காக பெரிதும் மதிக்கப்பட்டார். மோட்சார்ட்(Mozart), பேத்தோவன்(Beethoven), சொப்பின்(Chopin), சூமான்(Robert Schumann), பெலிக்ஸ் மென்டல்சான்(Felix Mendelssohn) ஆகியோர் பாக் கின் குறிப்பிடத்தகுந்த ரசிகர்கள் ஆவர்;[27] இவர்களின் சுர இணைப்புச் சார்ந்த இசை ( contrapuntal style) க்கு பாக் கின் இசை தாக்கமே ஆகும். இசை மேதை பேத்தோவன் இவரை இசை ஹார்மோனியின் தந்தை என குறிப்பிடுகிறார்.[28]

1802 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட யோவான் நிகோலஸ் போர்கல் லின் பாக் கின் வாழ்க்கை வரலாற்றின் மூலம் பொது மக்களிடையே பாக் கின் மதிப்பு பெரிதளவு உயர்ந்தது.[29] பெலிக்ஸ் மென்டல்சான்(Felix Mendelssohn), 1829 ஆம் ஆண்டு பெர்லின் நகரில் நடந்த இசை நிகழ்ச்சியில் Matthäuspassion என்னும் பாக் கின் இசையை வாசித்ததால் பாக் பெருமை இன்னும் நன்றாக அறியப்பட்டது.

பாக் கின் இசை சேக்சுபியரின் இலக்கியம் மற்றும் ஐசாக் நியூட்டனின் அறிவியலொடு ஒப்பிடப்பட்டு மதிக்கப்படுகிறது.[30] 20 ஆம் நூற்றாண்டில், ஜெர்மனியில் உள்ள பல சிலைகள் பாக் கின் ஞாபகமாக உருவாக்கப்பட்டது. விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ள வொயேஜர் 1 மற்றும் வொயேஜர் 2 கலங்கலில் உள்ள வொயேஜர் தங்கத் தட்டில் மிக அதிகப்பட்சமாக மூன்று மூறை இவருடைய இசை இடம் பெறுகிறது.[31]

புதன் (கோள்) இன் ஒரு பள்ள தாக்கிற்கும், இரண்டு விண்கற்களுக்கும் (1814 Bach, 1482 Sebastiana) இவர் நினைவாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.[32]

References[தொகு]

  1. Blanning, T. C. W.The triumph of music: the rise of composers, musicians and their art, 272: "And of course the greatest master of harmony and counterpoint of all time was Johann Sebastian Bach, 'the Homer of music'
  2. 2.0 2.1 Wolff (2000), p. 19
  3. 3.0 3.1 Wolff (2000), p. 46
  4. Boyd (2000), pp. 7–8
  5. Mendel et al (1998), p. 299
  6. Wolff (2000), p. 45
  7. 7.0 7.1 "Johann Sebastian Bach: a detailed informative biography" baroquemusic.org. Retrieved 19 February 2012.
  8. Wolff (2000), pp. 41–43
  9. Geiringer (1966), p. 13
  10. Rich (1995), p. 27
  11. Chiapusso (1968), p. 62
  12. "Classical Net – Basic Repertoire List – Buxtehude". Classical.net. Retrieved 20 September 2008.
  13. Schweitzer (1967), p. 331
  14. Mendel et al (1998), p. 80
  15. Spaeth (2005), p. 37
  16. 16.0 16.1 Geiringer (1966), p. 50
  17. Russell H. Miles, Johann Sebastian Bach: An Introduction to His Life and Works (Englewood Cliffs, New Jersey: Prentice-Hall, Inc., 1962), 86–87.
  18. Hanford, Jan. "J.S. Bach: Timeline of His Life". jsbach.org. Retrieved 8 March 2012. பரணிடப்பட்டது 2012-02-26 at the வந்தவழி இயந்திரம்
  19. Mendel et al (1998), p. 188
  20. Breitenfeld, Tomislav; Solter, Vesna Vargek; Breitenfeld, Darko; Zavoreo, Iris; Demarin, Vida (3 January 2006). "Johann Sebastian Bach's Strokes" (PDF). Acta Clinica Croatica (Sisters of Charity Hospital) 45 (1). Retrieved 20 May 2008.
  21. Baer, Ka. (1956). "Johann Sebastian Bach (1685–1750) in medical history". Bulletin of the Medical Library Association (Medical Library Association) 39 (206).
  22. Breitenfeld, D.; Thaller V, Breitenfeld T, Golik-Gruber V, Pogorevc T, Zoričić Z, Grubišić F (2000). "The pathography of Bach's family". Alcoholism 36: 161–64.
  23. "The World-Famous Organist, Mr. Johann Sebastian Bach, Royal Polish and Electoral Saxon Court Composer, and Music Director in Leipzig," by Carl Philipp Emanuel Bach and Johann Friedrich Agricola, from Mendel et al (1998), 299
  24. "Johann Sebastian Bach: a detailed informative biography". baroquemusic.org. Retrieved 19 February 2012.
  25. Mendel et al (1998), p. 297
  26. "[Bach was] mocked as passé even in his own lifetime." in Morris (2005), p. 2
  27. Schenk, Erich (1959). Mozart and his times. Knopf. p. 452
  28. Kerst, Friedrich (1904). "Beethoven im eigenen Wort". Die Musik (M. Hesse.) 4: 14–19
  29. Geck, Martin. "Johann Sebastian Bach: Life and Work". Houghton Mifflin Harcourt. Retrieved 22 February 2012.
  30. "Biography of Johann Sebastian Bach –PianoParadise". PianoParadise.com. Retrieved 22 February 2012.
  31. "Golden Record Music List". NASA. Retrieved 26 July 2012
  32. 1814 Bach, 1482 Sebastiana, JPL Small-Body Database
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோகான்_செபாஸ்தியன்_பாக்&oldid=3226380" இலிருந்து மீள்விக்கப்பட்டது