ஜார்ஜ் ஃபிரிடெரிக் ஹாண்டெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜார்ஜ் ஃபிரிடெரிக் ஹாண்டெல், 1733

ஜார்ஜ் ஃபிரிடெரிக் ஹாண்டெல் (George Frideric Handel - 23 பெப்ரவரி 1685 – 14 ஏப்ரல் 1759) ஜேர்மனியில் பிறந்த பரோக் இசையமைப்பாளர் ஆவார். இவர் இசை நாடகங்கள், நீண்ட இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்குப் பெயர் பெற்றவர். ஜேர்மனியில், ஹாலே என்னுமிடத்தில் பிறந்த இவர் வளர்ந்த பின்னர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை இங்கிலாந்திலேயே கழித்தார். 1727 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி இவர் இங்கிலாந்தின் குடிமகனானார்.