வெஸ்ட்மின்ஸ்டர் மடம்
வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை, வெஸ்ட்மின்ஸ்டர் அபி மற்றும் புனித மார்கெரெட் தேவாலயம் | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
![]() | |
வகை | பண்பாடு |
ஒப்பளவு | I, II, IV |
உசாத்துணை | 426 |
UNESCO region | ஐரோப்பாவின் உலக பாரம்பரியப் பட்டியல் |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1987 (11வது தொடர்) |
வெஸ்ட்மின்ஸ்டர் புனித பீட்டரின் விதிபயில் தேவாலயம் (Collegiate Church of St Peter at Westminster) என்ற பெயருடைய, பெரும்பாலும் வெஸ்ட்மினிஸ்டர் மடம் (அபி) (Westminster Abbey) என்றே அழைக்கப்படுகின்ற, இந்த தேவாலயம் ஐக்கிய இராச்சியத்தில் இலண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையை அடுத்து மேற்கில் கோதிக் பாங்கில் அமைந்துள்ளது. இந்த தேவாலயம் மன்னரின் நேரடி ஆட்சியில், பேராயரின் கட்டுப்பாட்டில் இல்லாது அதேநேரம் மறைவழிகளின்படி (canons) வழிபாடுகளை நடத்தும் அரசரடி விதிபயில் தேவாலயமாகும். இங்கு தான் வழமையாக பிரித்தானிய மன்னர்களின் முடி சூட்டும் விழாவும் ஆங்கில, பின்னர் பிரித்தானிய தற்போது பொதுநலவாய மன்னர்களின் அடக்கங்களும் நடைபெறுகின்றன. சிறிதுகாலம், 1546 முதல் 1556 வரை ,இது கதீட்ரல் (மறைப்பேராயர் வழிநடத்தும் தேவாலயம்) என்ற தகுதி பெற்றிருந்தது.
வெளியிணைப்புகள்[தொகு]
- அதிகாரபூர்வ தளம்
- வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தின் வரலாற்றுப் புகைப்படங்கள்
- Westminster Abbey: A Peek Inside - Life magazine
- Keith Short - Sculptor Images of stone carving for Westminster Abbey
- Carved Crests for the Knights of the Bath
- A history of the choristers and choir school of Westminster Abbey
- Catholic Encyclopedia: Westminster Abbey
- Telegraph.co.uk
- Adrian Fletcher’s Paradoxplace Westminster Abbey Pages—Photos
- A panorama of Westminster Abbey in daytime – JPEG and 3D Quicktime versions
- டுவிட்டரில் வெஸ்ட்மின்ஸ்டர் அபி