ஐரீன் ஜோலியட் கியூரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஐரீன் ஜோலியட்-கியூரி Irène Joliot-Curie |
|
|---|---|
| பிறப்பு | செப்டம்பர் 12, 1897 |
| பிறப்பிடம் | பாரிசு, பிரான்சு |
| இறப்பு | மார்ச்சு 17 1956 (அகவை 58) |
| இறப்பிடம் | பாரிசு, பிரான்சு |
| தேசியம் | பிரெஞ்சு |
| துறை | வேதியியல் |
| கல்வி கற்ற இடங்கள் | சோர்போன் |
| ஆய்வு நெறியாளர் | பால் லாங்கெவன் |
| அறியப்படுவது | அணுக்கரு மூலகத்திரிவு |
| விருதுகள் | வேதியியலுகான நோபல் பரிசு (1935) |
ஐரீன் ஜோலியட்-கியூரி (Irène Joliot-Curie, 12 செப்டம்பர் 1897 – 17 மார்ச் 1956) புகழ்பெற்ற நோபல் தம்பதிகளான மேரி கியூரி மற்றும் பியரி கியூரியின் மகளும் பிரெஞ்சு அறிவியலாளரும் ஆவார். இவரும் இவரது கணவர் பிரெடரிக் ஜோலியட்-கியூரியும் இணைந்து 1935ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசினை வென்றனர். இதன்மூலம் இன்றுவரை ஒரு குடும்பத்திலிருந்து மிகக்கூடுதலான நோபல் பரிசு வென்ற பெருமை இவர்களது குடும்பத்திற்கு கிட்டியது.[1] இவரது மக்கள் ஹெலன் மற்றும் பியரியும் சிறப்புமிக்க அறிவியலாளர்கள்.[2]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Nobel Laureates Facts: 'Family Nobel Laureates'". Nobel Foundation (2008). பார்த்த நாள் 2008-09-04.
- ↑ Byers, Nina; Williams, Gary A. (2006). "Hélène Langevin-Joliot and Pierre Radvanyi". Out of the Shadows: Contributions of Twentieth-Century Women to Physics. Cambridge, UK: Cambridge University Press. ISBN 0521821975.