வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி (Willard Frank Libby, டிசம்பர் 17, 1908செப்டெம்பர் 8, 1980) ஒரு அமெரிக்க இயற்பியல் வேதியியலாளர் ஆவார். தொல்லியல் துறையில் புரட்சிகரமான மாற்றத்தை உருவாக்கிய கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு முறையின் வளர்ச்சியில் இவருக்கு இருந்த பங்கு காரணமாக இவர் புகழ் பெற்றார்.

இவர் கொலராடோவிலுள்ள கிராண்ட் வலி (Grand Valley) என்னுமிடத்தில் பிறந்தார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இருந்து 1931 ஆம் ஆண்டில் இளநிலைப் பட்டத்தையும், 1933 ஆம் ஆண்டில் வேதியியலில் முனைவர் பட்டத்தையும் பெற்றார். அங்கேயே விரிவுரையாளராகச் சேர்ந்துகொண்ட லிப்பி, பின்னர் துணைப் பேராசிரியரானார்.

1960 இல் வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.