ரிச்சர்ட் குன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ரிச்சர்ட் குன் | |
|---|---|
| பிறப்பு | திசம்பர் 3, 1900 |
| பிறப்பிடம் | வியன்னா, ஆஸ்திரியா |
| இறப்பு | ஆகத்து 01 1967 (அகவை 66) |
| இறப்பிடம் | ஹைடல்பெர்க், ஜெர்மனி |
| தேசியம் | ஜெர்மனி, ஆஸ்திரியா |
| துறை | வேதியியல் |
| விருதுகள் | வேதியியல் நோபல் பரிசு (1938) |
ரிச்சர்ட் குன் (Richard Kuhn, டிசம்பர் 3, 1900 - ஆகஸ்ட் 1, 1967) ஒரு ஆஸ்திரிய-ஜெர்மானிய உயிரிவேதியியல் அறிவியலாளர். இவர் 1938ம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.
வாழ்க்கை வரலாறு [தொகு]
ஆரம்பகால வாழ்க்கை [தொகு]
ரிச்சர்ட் குன் ஆஸ்திரியாவில் பிறந்தார்; இலக்கணப் பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளியில் தன்தொடக்கக்கல்வி பயின்றார். குன் 1918 ல் தொடங்கி வியன்னா பல்கலைக்கழகத்தில் வேதியியல் பயின்றார். பின்னர் ரிச்சர்ட் வில்ஸ்டாட்டரின் இணைந்து நொதிகள் துறையில் 1922 இல் முனைவர் பட்டம் பெற்றார்.