ஐ-இச்சி நெகிழ்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஐ-இச்சி நெகிழ்சி Ei'ichi Negishi |
|
|---|---|
| பிறப்பு | 1935 |
| பிறப்பிடம் | சாங்குச்சுன்(Changchun), சீனா |
| தேசியம் | நிப்பான்(சப்பான்) |
| பணி நிறுவனம் | பர்டியூ பல்கலைக்கழகம் சிரக்கியூசு பல்கலைக்கழகம் |
| கல்வி கற்ற இடங்கள் | தோக்கியோ பல்கலைக்கழகம் பென்சில்வேனியா பல்கலைக்கழகம் |
| அறியப்படுவது | நெகிழ்சி பிணைப்பு (Negishi coupling) |
| விருதுகள் | சர் எடுவர்டு பிராங்க்லாந்து பரிசு விரிவுரையாளர்ப்பதவி 2000) வேதியியல் நோபல் பரிசு (2010) |
ஐ-இச்சி நெகிழ்சி (Ei'ichi Negishi, 根岸 英) (பி. சூலை 14, 1935)[1] சீனாவில் பிறந்த ஒரு நிப்பானிய வேதியியலாளர். இவர் கண்டுபிடித்த நெகிழ்சி பிணைப்பு(Negishi coupling)[2] புகழ்பெற்றது. இவர் ரிச்சர்டு ஃகெக், அக்கிரா சுசுக்கி ஆகிய இருவருடன் சேர்ந்து 2010 ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை வென்றுள்ளார். இவர் பணிவாழ்க்கையைப் பெரும்பாலும் அமெரிக்காவில் இந்தியானா மாநிலத்தில் உள்ள பர்டியூ பல்கலைக்கழகத்தில் கழித்தார்.
மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும் [தொகு]
- ↑ Negishi's CV on its lab's website
- ↑ Anthony O. King, Nobuhisa Okukado and Ei'ichi Negishi (1977). "Highly general stereo-, regio-, and chemo-selective synthesis of terminal and internal conjugated enynes by the Pd-catalysed reaction of alkynylzinc reagents with alkenyl halides". Journal of the Chemical Society Chemical Communications: 683. doi:10.1039/C39770000683.
|
|||||||||||||||||