எடுவர்டு பூக்னர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எடுவர்டு பூக்னர் நுண்ணுயிரி செல்கள் இல்லாமலே நொதிக்கச் செய்யும் முறையக் கண்டதற்காக, 1907 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

எடுவர்டு பூக்னர் (Eduard Buchner, மே 20, 1860ஆகஸ்ட் 13, 1917) ஜெர்மனியைச் சேர்ந்த வேதியியல் அறிஞரும் நொதியியல் (zymologist) அறிஞரும் ஆவார். இவர் நுண்ணுயிரி செல்கள் இல்லாமலே நொதிக்கச் செய்யும் முறையக் கண்டதற்காக, 1907 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

எடுவர்டு பூக்னர் ஜெர்மனியில் மியூனிக் நகரில் பிறந்தார். இவருடைய தந்தையார் மருத்துவராகவும் குற்றவியலில் துப்பு கண்டுபிடிக்கும் மருத்துவராக இருந்தார். எடுவர்டு பூக்னர் அவர்கள் 1884ல் மியூனிக் நகரில் அடால்ஃவ் ஃவான் பேயரிடம் (dolf von Baeyer) வேதியியலும் பேராசிரியர் சி. ஃவான் நேகெலி (C. von Naegeli) அவர்களிடம் செடிகொடியியல் அறிவியலும் பயிலத் தொடங்கினார். இவர் 1888ல் பெர்லின் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=எடுவர்டு_பூக்னர்&oldid=1443490" இருந்து மீள்விக்கப்பட்டது