மலேசியா வாசுதேவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மலேசியா வாசுதேவன்
பிறப்பு ஜூன் 15, 1944(1944-06-15)
ராஜகிரி எஸ்டேட், கோலா சிலாங்கர் மாவட்டம், சிலாங்கர், மலேசியா
இறப்பு பெப்ரவரி 20, 2011 (அகவை 66)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள் சாத்து ஆறுமுகம் நாயர்
பணி பின்னணிப் பாடகர், நடிகர்
செயல்பட்ட ஆண்டுகள் 1944–2011
வாழ்க்கைத் துணை உஷா வாசுதேவன்
பிள்ளைகள் யுகேந்திரன், பிரசாந்தினி, பவித்ரா

மலேசியா வாசுதேவன் (சூன் 15, 1944 - பெப்ரவரி 20, 2011) ஒரு தென்னிந்தியத் திரைப்படப் பாடகரும் நடிகரும் ஆவார். எட்டாயிரத்திற்கும் அதிகமான தமிழ்த் திரைப்பாடல்களைப் பாடியவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

கேரளத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மலேசியாவைச் சேர்ந்த சத்து நாயர் - அம்மாளு தம்பதியருக்கு 8வது மகனாகப் பிறந்தார் வாசுதேவன். மலேசியாவில் தமிழர் இசைக் குழு ஒன்றில் முக்கிய பாடகராக விளங்கினார்

மலேசியாவில் பல நாடகங்களில் நடித்த அனுபவத்தை நம்பிக்கையாகக் கொண்டு, சென்னை வந்து திரைப்பட வாய்ப்புகளைத் தேடினார். மலேசியத் தமிழர்கள் கூட்டாகத் தயாரித்த "இரத்தப் பேய்" என்ற தமிழ்ப் படத்தில் முதல் முறையாக நடிகனாக அறிமுகமானார். 1970களில் விளம்பர நிறுவனங்களுக்காக 45 ஆவணப் படங்களில் நடித்துள்ளார். இளையராஜாவின் "பாவலர் பிரதர்ஸ்" குழுவில் பல மேடைக்கச்சேரிகளில் பாடி வந்தார்.

பின்னணிப் பாடகராக[தொகு]

ஜி. கே. வெங்கடேஷ் இசையமைப்பில் "பொல்லாத உலகில் ஒரு போராட்டம்" என்ற படத்தில் பாலு விக்கிற பத்தம்மா... என்ற பாடல் மூலம் திரையுலகில் பாடகராக அறிமுகமானார். பாரதிராஜா இயக்கத்தில் 16 வயதினிலே படத்தில் கமல்ஹாசனுக்காக "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு..." என்ற அவர் பாடிய பாடல் பெரும் புகழ் பெற்றது.

அதன் பிறகு ஏராளமான படங்களில் புகழ்பெற்ற பாடல்களைப் பாடினார். கோடைகாலக் காற்றே, அள்ளித் தந்த பூமி, அடியாடு பூங்கொடியே, தங்கச் சங்கிலி எனப் பல பாடல்கள் புகழ் பெற்றன.

நடிகராக[தொகு]

ஒரு கைதியின் டைரி படத்தில் வில்லனாக நடித்தார். அதன் பின்னர் பல படங்களில் நடிக்கவும் தொடங்கினார். 85 திரைப்படங்களில் நடித்துள்ளார் மலேசியா வாசுதேவன். முதல் வசந்தம், ஊர்க்காவலன், ஜல்லிக்கட்டு என வெற்றிப்படங்கள் பலவற்றில் வில்லனாகவும் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் "சிலந்தி வலை" உட்பட ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.

ஆனந்த் என்பவர் இயக்கிய "மலர்களிலே அவள் மல்லிகை" என்ற படத்துக்கு கதை, வசனம் எழுதியிருக்கிறார்.

விருதுகள்[தொகு]

தமிழக அரசின் கலைமாமணி விருது இவருக்குக் கிடைத்தது.

மறைவு[தொகு]

சில ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட வாசுதேவன் 2011 பெப்ரவரி 20 ஞாயிற்றுக்கிழமை பகல் 1 மணிக்கு காலமானார்[1]. அவருக்கு மனைவியும், யுகேந்திரன் என்ற மகனும், பிரசாந்தினி என்ற மகளும் உள்ளனர். யுகேந்திரன் நடிகராகவும் பின்னணிப் பாடகராகவும் உள்ளார். பிரசாந்தினியும் இப்போது பின்னணி பாடி வருகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Noted singer Malaysia Vasudevan passes away". Mathrubhumi. 2011-02-20. http://www.mathrubhumi.com/english/story.php?id=105022. பார்த்த நாள்: 2011-02-20. 

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மலேசியா_வாசுதேவன்&oldid=1815126" இருந்து மீள்விக்கப்பட்டது