ஆகஸ்டு 12
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆகஸ்ட் 12 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| << | ஆகஸ்ட் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
| MMXIII | ||||||
ஆகஸ்டு 12 கிரிகோரியன் ஆண்டின் 224வது நாளாகும். நெட்டாண்டுகளில் 225வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 141 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
Events [தொகு]
- கிமு 30 - மார்க் அந்தோனி போரில் தோல்வியடைந்ததை அடுத்து எகிப்தின் கிளியோபாத்ரா தற்கொலை செய்து கொண்டாள்.
- 1281 - மொங்கோலியப் பேரரசன் குப்ளாய் கானின் கடற்படைகள் ஜப்பானை அணுகும் போது சூறாவளியில் சிக்குண்டு இறந்தனர்.
- 1480 - ஒட்டோமான் படையினர் இஸ்லாம் மதத்திற்கு மாற ஒப்புக்கொள்ளாத 800 கிறிஸ்தவர்களை தலையை சீவிக் கொன்றனர்.
- 1499 - வெனிசியர்களுக்கும் ஒட்டோமான் துருக்கியர்களுக்கும் இடையில் முதற் போர் இடம்பெற்றது.
- 1833 - சிக்காகோ அமைக்கப்பட்டது.
- 1851 - ஐசாக் சிங்கர் தனது தையல் இயந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார்.
- 1853 – நியூசிலாந்து சுயாட்சி பெற்றது.
- 1877 - அசாப் ஹோல் என்பவர் செவ்வாய்க் கோளின் டெய்மோஸ் என்ற சந்திரனைக் கண்டுபிடித்தார்.
- 1883 - கடைசி குவாகா (வரிக்குதிரை வகை) ஆம்ஸ்டர்டாமில் இறந்தது.
- 1914 - முதலாம் உலகப் போர்: பிரித்தானியா ஆஸ்திரியா-ஹங்கேரியுடன் போரை அறிவித்தது. பிரித்தானிய இராச்சியதின் அனைத்து குடியேற்ற நாடுகளும் இதனுள் அடங்கின.
- 1952 - மொஸ்கோவில் 13 யூத இன அறிவியலாளர்கள், கவிஞர்கள் கொல்லப்பட்டனர்.
- 1953 - சோவியத் ஒன்றியம் ஜோ 4 என்ற தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை நடத்தியது.
- 1960 - எக்கோ I என்ற முதலாவது தொலைத்தொடர்பு செய்மதி ஏவப்பட்டது.
- 1964 - இனவெறிக் கொள்கை காரணமாக தென்னாபிரிக்கா ஒலிம்பிக்கில் விளையாடத் தடை செய்யப்பட்டது.
- 1978 - ஜப்பானும் மக்கள் சீனக் குடியரசும் தமக்கிடையே நட்புறவு, அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.
- 1981 - ஐபிஎம் தனி மேசைக் கணினி வெளியிடப்பட்டது.
- 1985 - ஜப்பானில் இரண்டு பயணிகள் விமானங்கள் மோதிக் கொண்டதில் 520 பேர் கொல்லப்பட்டனர். 4 பேர் காப்பாற்றப்பட்டனர்.
- 1985 - ஈழத் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் 2ம் கட்ட திம்புப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.
- 1990 - வீரமுனைப் படுகொலைகள், 1990: அம்பாறை, வீரமுனையில் நானூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1990 - அமெரிக்கா, தென் டகோட்டாவில் டிரன்னொசோரஸ் என்னும் டைனசோரின் முழுமையான எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
- 2000 - கே-141 கூர்ஸ்க் என்ற ரஷ்யக் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சியின் போது 118 பேருடன் பாரெண்ட்ஸ் கடலில் மூழ்கியது.
- 2005 - ஸ்ரீ லங்காவின் வெளிவிவகார அமைச்சர் லக்சுமன் கதிர்காமர் கொழும்பில் அவரது வீட்டில், நீச்சல் தடாகத்தில் நீராடும் போது சுடப்பட்டு அடுத்த நாள் இறந்தார்.
- 2005 - மாலை தீவுகளில் அரசுக்கெதிராக கிளர்ச்சி இடம்பெற்றது.
- 2005 - இலங்கையின் தமிழ் வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளர் ரேலங்கி செல்வராஜா கொலை செய்யப்பட்டார்.
- 2006 - இலங்கையின் புத்திஜீவிகளில் ஒருவரான கேதீஸ் லோகநாதன் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பிறப்புக்கள் [தொகு]
- 1887 - எர்வின் சுரோடிங்கர், ஆஸ்திரிய இயற்பியலாளர் (இ. 1961)
- 1924 - ஸியா உல் ஹக், பாகிஸ்தான் அதிபர் (இ.1988)
- 1971 - பீட் சாம்ப்ரஸ், அமெரிக்க டென்னிஸ் வீரர்
இறப்புகள் [தொகு]
- கிமு 30 - கிளியோபாத்ரா (பி. கிமு 69)
- 1848 - ஜோர்ஜ் ஸ்டீவன்சன், தொடருந்து கண்டுபிடித்தவர் (பி. 1781)
- 1955 - தோமஸ் மான், ஜேர்மனிய எழுத்தாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1875)
- 1955 - ஜேம்ஸ் சம்னர், அமெரிக்க வேதியியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1887)
- 1964 - இயான் பிளெமிங், ஆங்கில இதழியலாளர், எழுத்தாளர் (பி. 1908)
- 1973 - வால்டர் ஹெஸ், சுவிஸ் மருத்துவர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1881)
- 1973 - கார்ள் சைக்ளெர், ஜேர்மனிய வேதியியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1898)
- 1979 - ஏர்ண்ஸ்ட் போரிஸ் செயின், ஜேர்மனிய வேதியியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1906)
- 1989 - வில்லியம் ஷாக்லி, அமெரிக்க இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1910)
- 2005 - ரேலங்கி செல்வராஜா, இலங்கையின் தமிழ் தொலைக்காட்சி அறிவிப்பாளர் (பி. 1960)