சீர்காழி இரா. அரங்கநாதன்
| சீர்காழி இரா. இரங்கநாதன் S. R. Ranganathan |
|
|---|---|
| பிறப்பு | ஆகத்து 9, 1892 சீர்காழி |
| இறப்பு | செப்டம்பர் 27 1972 (அகவை 80) பெங்களூர், இந்தியா |
| தேசியம் | இந்தியர் |
| கல்வி | சென்னை கிறித்தவக் கல்லூரி |
| பணி | நூலகவியலாளர் |
| அறியப்படுவது | நூலகவியலின் ஐந்து விதிகள் |
|
இக் கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. அருள் கூர்ந்து, நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக் கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். மேற்கோள்கள் தரப்படாத கட்டுரைப் பகுதிகள் கேள்விக்கு உட்படலாம் என்பதுடன் நீக்கப்படவும் கூடும். |
சீர்காழி இராமாமிருதம் இரங்கநாதன் (S. R. Ranganathan, 09.08.1892 - 27.09.1972) இந்தியாவைச் சேர்ந்த நூலகவியலாளர். நூலகவியலின் ஐந்து விதிகளை அறிமுகம் செய்தவர்[சான்று தேவை]; கொலோன் நூற்பகுப்பாக்க முறையை உருவாக்கியவர்; இந்திய நூலகவியலின் தந்தை என அறியப்படுபவர். நூலகவியலுக்கு இவர் செய்த பங்களிப்புக்காக இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ விருது வழங்கிக் கௌரவித்தது.
இரங்கநாதன் 1892 இல் சீர்காழியில் பிறந்தார். கணிதத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களை சென்னை கிறித்தவக் கல்லூரியில் (Madras Christian College) பெற்றார். பின் ஆசிரியத் தகுதி பெற்று மங்களூர், கோயம்புத்தூர், சென்னைப் பல்கலைக்கழகங்களில் கணிதம் கற்பித்தார்.
1924 சனவரியில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் நூலகராக நியமனம் பெற்றார்.