லக்சுமன் கதிர்காமர்
| லக்சுமன் கதிர்காமர் | |
| பதவியில் 1988 – 1993 |
|
| அரசியல் கட்சி | இலங்கை சுதந்திர கட்சி |
|---|---|
|
|
|
| பிறப்பு | ஏப்ரல் 12, 1932 கண்டி,இலங்கை[1] |
| இறப்பு | ஆகஸ்ட் 12, 2005 கொழும்பு, இலங்கை |
| தேசியம் | இலங்கையர் |
| பழைய மாணவர் | புனித திரித்துவக் கல்லூரி, கண்டி |
| தொழில் | அரசியவாதி |
| துறை | சட்டத்தரணி |
| சமயம் | கிறித்தவம் |
| இணையதளம் | http://www.kadirgamarinstitute.lk/ |
லக்சுமன் கதிர்காமர் இலங்கையின் முன்னாள் அரசியல்வாதியும் வெளிநாட்டமைச்சருமாவார். 2005 13 ஆகஸ்ட் ஆம் நாள் கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலையை விடுதலைப் புலிகள் அமைபினர் செய்ததாக அரசு குற்றஞ்சாட்டியது.[2]
பொருளடக்கம் |
தொடக்க வாழ்கை [தொகு]
கதிர்காமர் மானிப்பாயை சொந்த இடமாகக் கொண்ட சாமுவேல் கதிர்காமருக்கும் பரிமளம் கதிர்காமருக்கும்[3] ஆறாவதும் கடைசி[4] பிள்ளையாக கண்டியில்[1] 1932 ஏப்ரல் 12 ஆம் நாள் பிறந்தார். பள்ளிக் கல்வியை கண்டி புனித திரித்துவக் கல்லூரியில் பயின்ற கதிகாமர் கல்லூரி துடுப்பாட்ட அணியின் தலைவராகவும் கல்லூரி ரக்பி அணியினதும் அங்கத்தராக இருந்தார் கல்லூரி தடகள விளையாட்டுக்களிலும் பங்குபற்றி வந்தார். 1950 ஆம் ஆண்டின் கல்லூரியின் சிறந்த மாணவருக்கான ரைட் தங்கப்பதக்கத்தை கதிர்காமர் வென்றார்.[4]
சட்டக் கல்வியை இலங்கைப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டார். இலங்கைப் பல்கலைகழகத்தின் துடுப்ப்பாட்ட அணியிலும் இவர் இடம்பிடித்திருந்தார். பட்டப்படிப்பின் பின் இலங்கை நீதவானின் செயலாளராக பணியாற்றினார். பின்னர் இங்கிலாந்து சென்ற கதிர்காமர் இன்னர் டெம்பள் (Inner Temple) வழையாக சட்டத்தரணியாக பதவியேற்றார் அதே வேலை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பாலியோல் கல்லூரியிலும் இணைந்துக் கொண்டார். இதன் போதும் துடுப்பாட்ட அணியில் இடம்பெற்றிருந்த கதிர்காமர் ஆக்சுபோடு பல்கலையின் மாண்வர் ஒன்றிய தலைவரகத் தேர்வுச் செய்யப்பட்டார்.[4]
வாழ்க்கை சுருக்கம் [தொகு]
- (1955) - சட்டப் படிப்பு பட்டம் - கொழும்பு பல்கலைக்கழகம்
- (????) - ஆங்கில இலக்கிய பட்டம் - ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
- (சித்திரை 1994-மார்கழி 2001) - இலங்கை வெளி விவகார அமைச்சர்
- (சித்திரை 2004-புரட்டாதி 2005) - இலங்கை வெளி விவகார அமைச்சர்
- (புரட்டாதி 13, 2005) - சுட்டுக் கொலை
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 "Lakshman Kadiragamar - Who Was He?". www.sinhale.com. http://www.sinhale.com/lakshman_kadiragamar.htm. Retrieved 2008-05-18.
- ↑ "Senior Sri Lanka minister killed". bbc. 13 August 2005. http://news.bbc.co.uk/2/hi/south_asia/4147196.stm. Retrieved 2008-05-18.
- ↑ "Sri Lankan Foreign Minister Lakshman Kadirgamar". TamilNet. 13 August 2005. http://www.tamilnet.com/art.html?catid=79&artid=15615. Retrieved 2008-05-18.
- ↑ 4.0 4.1 4.2 Jeyaraj, D.B.S. (Aug 21, 2005). "Lakshman Kadirgamar [1932 - 2005"]. TamilWeek. http://www.tamilweek.com/Lakshman_Kadirgamar_0014.html. Retrieved 2008-05-18.
வெளி இணைப்புகள் [தொகு]
- கதிர்காமர் படுகொலைபி.பி.சி செய்தி
- Sri Lankan Foreign Minister Lakshman Kadirgamar - Tamil Net
- Sri Lanka's Lakshman Kadirgamar Dies at 73 - AP
- கதிர்காமரின் இராஜதந்திரம் சாதித்தது என்ன? - Eelampage
- Death of a master diplomat - The Hindu
- Lakshman Kadirgamar - Effective Sri Lankan Foreign Minister - The Independent
- சிங்கள தேசத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த லக்ஸ்மன் கதிர்காமர்-தமிழ்நாதம்
| அரசியல் அலுவலகம் | ||
|---|---|---|
| முன்னர் அப்துல் காதர் சாவுல் அமீட் |
இலங்கை வெளிநாட்டமைச்சர் 1994–2001 |
பின்னர் டிரோன் பர்னான்டோ |
| முன்னர் டிரோன் பர்னான்டோ |
இலங்கை வெளிநாட்டமைச்சர் 2004–2005 |
பின்னர் அனுரா பண்டாரநாயக்கா |