மரியோ பலோட்டெலி
| சுய விவரம் | |||
|---|---|---|---|
| முழுப்பெயர் | மரியோ பர்வூயா பலோட்டெலி[1] | ||
| பிறந்த தேதி | 12 ஆகத்து 1990 [2] | ||
| பிறந்த இடம் | பாலெர்மோ, இத்தாலி | ||
| உயரம் | 1.89 மீ ()[3] | ||
| ஆடும் நிலை | முன்னணி உதைப்பாளர் [2] | ||
| கழக விவரம் | |||
| தற்போதைய கழகம் | மான்செஸ்டர் சிடி | ||
| எண் | 45 | ||
| இளநிலை வாழ்வழி | |||
| 2001–2005 | லூமெசான் | ||
| 2006–2007 | மிலன் இன்டர்நேசனல் | ||
| முதுநிலை வாழ்வழி* | |||
| ஆண்டுகள் | அணி | Apps† | (Gls)† |
| 2005–2006 | லூமெசான் | 2 | (0) |
| 2007–2010 | மிலன் இன்டர்நேசனல் | 59 | (20) |
| 2010– | மான்செஸ்டர் சிடி | 40 | (19) |
| தேசிய அணி‡ | |||
| 2008–2010 | இத்தாலி 21 அகவை கீழானோர் அணி |
16 | (6) |
| 2010– | இத்தாலி தேசிய அணி | 14 | (4) |
| * Senior club appearances and goals counted for the domestic league only and correct as of 13 மே 2012. † Appearances (Goals). |
|||
மரியோ பர்வூயா பலோட்டெலி (Mario Barwuah Balotelli, பிறப்பு: ஆகத்து 12, 1990) இத்தாலியைச் சேர்ந்த காற்பந்தாட்ட விளையாட்டு வீரர். பலோட்டெலி மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் கழக அணியிலும் இத்தாலிய தேசிய அணியிலும் முன்னால் நின்று தாக்கி ஆடும் காற்பந்தாட்டளராக உள்ளார்.[4][5]
பலோட்டெலி தனது காற்பந்தாட்ட வாழ்வை ஏ.சி. லூமெசான் அணியில் துவங்கினார். முன்னதாக பார்செலோனா காற்பந்தாட்டக் கழகத்தில் விளையாட எடுத்த முயற்சிகள் தோல்வியுற்றன.[6] பின்னர் 2007ஆம் ஆண்டில் மிலன் இன்டர்நேசனியனோல் கழகத்தில் சேர்ந்தார். அங்கு அணியின் பயிற்சியாளருடன் பிணக்குகளுடனான உறவு இருந்தது. பல ஒழுங்குமுறைச் சிக்கல்களுக்குப் பிறகு சனவரி 2009இல் இன்டர் மிலன் முதலாம் அணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இத்தாலியத் தொலைக்காட்சி ஒன்றில் ஏ.சி.மிலன் சீருடையுடன் தோன்றியதால் மார்ச் 2010இல் இன்டர் மிலன் இரசிகர்கள் மிகவும் கொதிப்படைந்தனர். இதனால் இவரது விளையாட்டு வாழ்வு இன்டர் மிலன் அணியில் முடிந்தது என்ற நிலையில் தொடர்ந்து இன்டருக்கு ஆடி வந்தார். முன்னாள் பயிற்சியாளர் ராபர்டோ மொன்சினி இவருக்கு புதுவாழ்வு கொடுக்கும் வகையில் மான்செஸ்டர் சிட்டி கழக அணியில் ஆகத்து 2010இல் சேர்த்துக் கொண்டார். இங்கும் இவரது ஆட்டமும் விளையாட்டு மைதானத்திற்கு வெளியேயான நடத்தையும் குறிப்பிடக்கூடியதாக இல்லை.
கானாவைச் சேர்ந்த பலோட்டெலி, இத்தாலியின் தேசிய அணியில் ஆகத்து 10, 2010இல் இணைந்தார். இத்தாலிய தேசிய காற்பந்தாட்ட அணியில் விளையாடும் முதல் கருப்பினத்தவர்களில் ஒருவராக உள்ளார்.
மேற்கோள்களும் குறிப்புக்களும்[தொகு]
- ↑ "Mario Balotelli". Goal.com. பார்த்த நாள் 3 செப்டம்பர் 2011.
- ↑ 2.0 2.1 "Mario Balotelli Profile". Inter. பார்த்த நாள் 3 சூலை 2010.
- ↑ "Manchester City FC Profile". Manchester City F.C. பார்த்த நாள் 24 October 2011.
- ↑ "Balotelli saluta l'Italia "Ho bisogno di giocare"" (in Italian). La Gazzetta dello Sport. 13 August 2010. http://www.gazzetta.it/Calcio/SerieA/Inter/13-08-2010/balotelli-saluta-italia-71775734390.shtml. Retrieved 13 August 2010.
- ↑ "Balotelli signs for City". Manchester City F.C.. 13 August 2010. http://www.mcfc.co.uk/News/Team-news/2010/August/Mario-Balotelli-signs-for-Manchester-City. Retrieved 13 August 2010.
- ↑ "Balotelli, maravillado con Thiago desde su paso por el Barça" (in Spanish). Sport (newspaper). 11 August 2011. http://www.sport.es/es/noticias/barca/20110811/balotelli-maravillado-con-thiago-desde-paso-por-barca/1113961.shtml. Retrieved 11 August 2011.
வெளி இணைப்புகள்[தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் மரியோ பலோட்டெலி தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- Mario Balotelli career stats at Soccerbase
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- Career profile La Gazzetta dello Sport (இத்தாலியம்)
- Profile ESPNsoccernet
- Premier League profile
- மரியோ பலோட்டெலி at National-Football-Teams.com