ஜூன் 27
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| << | ஜூன் 2008 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | |||||
| MMVIII | ||||||
ஜூன் 27 கிரிகோரியன் ஆண்டின் 178ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 179ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 187 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1358 - துப்ரோவ்னிக் குடியரசு அமைக்கப்பட்டது.
- 1709 - ரஷ்யாவின் முதலாம் பியோத்தர் பொல்டாவா என்ற இடத்தில் சுவீடனின் பன்னிரண்டாம் சார்ல்சின் படைகளை வென்றான்.
- 1801 - கெய்ரோ நகரம் பிரித்தானியப் படையினரிடம் வீழ்ந்தது.
- 1806 - புவனஸ் அயரசை பிரித்தானியர் கைப்பற்றினர்.
- 1896 - ஜப்பான், சன்ரிக்கு என்னுமிடத்தில் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 27,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1950 - கொரியப் போரில் பங்கு பற்றவென ஐக்கிய அமெரிக்கா தனது படைகளை அனுப்ப முடிவு செய்தது.
- 1954 - இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்பட்டது.
- 1954 - உலகின் முதலாவது அணுக்கரு ஆற்றல் உற்பத்தி மையம் மொஸ்கோவுக்கு அருகில் ஓப்னின்ஸ்க் என்னும் இடத்தில் அமைக்கப்பட்டது.
- 1957 - லூசியானா, மற்றும் டெக்சாசில் நிகழ்ந்த சூறாவளியில் 500 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
- 1967 - உலகின் முதலாவது ஏடிஎம் (ATM) லண்டன் என்ஃபீல்டில் அமைக்கப்பட்டது.
- 1974 - அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சன் சோவியத் ஒன்றியத்துக்கு பயணம் மேற்கொண்டார்.
- 1977 - சிபூட்டி பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1979 - முகமது அலி குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
- 1991 - சுலோவீனியா தனது விடுதலையை அறிவித்த இரண்டாம் நாளில் யுகோஸ்லாவியா அதன் மீது படையெடுத்தது.
- 1998 - கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது.
- 2007 - டோனி பிளேர் பிரதமர் பதவியைத் துறந்ததைத் தொடர்ந்து கோர்டன் பிறௌன் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரானார்.
[தொகு] பிறப்புகள்
- 1880 - ஹெலன் கெல்லர், அமெரிக்கப் பெண் எழுத்தாளர் (இ. 1968)
- 1927 - டொமினிக் ஜீவா, ஈழத்தின் எழுத்தாளர், இதழாசிரியர்
[தொகு] இறப்புகள்
- 1999 - ஜோர்ஜ் பப்படபவுலஸ், முன்னாள் கிரேக்க அரசுத் தலைவர் (பி. 1919)

