பி. டி. உஷா
| பி. டி. உஷா | |
|---|---|
| பிறப்பு | பிலாவுள்ளகண்டி தெக்கெப் பரம்பில் உஷா[1] 27 சூன் 1964 பய்யோலி, கோழிக்கோடு, கேரளம், இந்தியா |
| இருப்பிடம் | பய்யோலி, கோழிக்கோடு |
| தேசியம் | இந்தியர் |
| மற்ற பெயர்கள் | பய்யோலி எக்ஸ்பிரஸ், தங்க மகள் |
| பணி | தடகள விளையாட்டாளர் |
| பணியகம் | இந்திய இரயில்வே |
| அறியப்படுவது | பத்மசிறீ |
| பெற்றோர் | பைத்தல், இலட்சுமி |
| வாழ்க்கைத் துணை | வி. சீனிவாசன் |
| பிள்ளைகள் | உஜ்வல் |
| இணையதளம் | |
| ptusha.org | |
| பதக்க சாதனைகள் | |||
|---|---|---|---|
| பெண்கள் தட களம் | |||
| ஆசிய விளையாட்டுப் போட்டிகள் | |||
| வெள்ளி | 1982 புது தில்லி | 100 மீட்டர்கள் | |
| வெள்ளி | 1982 புது தில்லி | 200 மீட்டர்கள் | |
| தங்கம் | 1986 சியோல் | 200 மீட்டர்கள் | |
| தங்கம் | 1986 சியோல் | 400 மீட்டர்கள் | |
| தங்கம் | 1986 சியோல் | 400 மீட்டர்கள் தடைகள் | |
| தங்கம் | 1986 சியோல் | 4x400 மீட்டர்கள் அஞ்சல் | |
| வெள்ளி | 1986 சியோல் | 100 மீட்டர்கள் | |
| வெள்ளி | 1990 பீஜிங் | 400 மீட்டர்கள் | |
| வெள்ளி | 1990 பீஜிங் | 4x100 மீட்டர்கள் அஞ்சல் | |
பரவலாக பி. டி. உஷா என அறியப்படும் பிலாவுள்ளகண்டி தெக்கெப்பரம்பில் உஷா (மலையாளம்: പിലാവുള്ളകണ്ടി തെക്കേ പറമ്പിൽ ഉഷ, Pilavullakandi Thekkeparambil Usha) (பிறப்பு சூன் 27, 1964) கேரளாவைச் சேர்ந்த ஓர் இந்திய தடகள விளையாட்டாளர் ஆவார். 1979ஆம் ஆண்டிலிருந்து இந்திய தடகள விளையாட்டுத் துறையில் பங்கெடுத்து வருகிறார். இந்தியத் தடகள விளையாட்டுக்களில் மாபெரும் சாதனையாளர்களில் ஒருவராகக் கருதப்படும் உஷா பலநேரங்களில் "இந்தியத் தட களங்களின் அரசி"எனக் குறிப்பிடப்படுகிறார்.[2] இவர் பய்யோலி எக்சுபிரசு என்றும் அழைக்கப்படுகிறார். தற்போது கேரளத்தின் கொயிலாண்டியில் உஷா தடகளப் பயிற்சிப் பள்ளியை நடத்தி வருகிறார். 1985இலும் 1986இலும் உலகத் தடகள விளையாட்டுக்களில் முதல் பத்து பெண் விளையாட்டாளர்களில் ஒருவராக விளங்கினார். இவருக்கு முன்பும் பின்பும் இந்தப் பட்டியலில் வேறெந்த இந்தியரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.