ஆகஸ்டு 19
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
(ஆகஸ்ட் 19 இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)
| << | ஆகஸ்ட் 2008 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||
| MMVIII | ||||||
ஆகஸ்டு 19 கிரிகோரியன் ஆண்டின் 231வது நாளாகும். நெட்டாண்டுகளில் 232வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 134 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1895 - கொழும்பு தலைமை அஞ்சல் அலுவலகம் திறக்கப்பட்டது.
- 1919 - ஐக்கிய இராச்சியத்தில் இருந்து ஆப்கானிஸ்தான் முழுமையான விடுதலை அடைந்தது.
- 1945 - ஹோ ஷி மின் தலைமையில் வியெட் மின் படைகள் வியெட்நாமின் ஹனோய் நகரைக் கைப்பற்றினர்.
- 1960 - சோவியத் ஸ்புட்னிக் விண்கலத்தில் பெல்கா, ஸ்ட்ரெல்கா என்ற இரு நாய்களை விண்ணுக்கு அனுப்பியது.
- 1980 - சவுதி அரேபியாவின் றியாட்டில் சவுதியா விமானம் தரையிறங்கும் போது நிகழ்ந்த விபத்தில் 301 பேர் கொல்லப்பட்டனர்.
- 1989 - போலந்தின் பிரதமராக சொலிடாறிற்றி தொழிற்சங்கவாதி டாடியூஸ் மசவியேஸ்கி அதிபர் ஜாருசெல்ஸ்கியினால் தெரிவுசெய்யப்பட்டார். 42 ஆண்டுகளின் பின்னர் தெரிவு செய்யப்படும் முதல் கம்யூனிஸ்ட் அல்லாத பிரதமர் இவரே ஆவார்.
- 1991 - ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி ஒன்றில் சோவியத் அதிபர் மிகைல் கர்பசோவ் கிறிமியா என்ற சுற்றுலா மையத்தில் ஓய்வெடுக்கும் போது கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
[தொகு] பிறப்புக்கள்
[தொகு] இறப்புகள்
- 1962 - இலாய்சி பாஸ்கல், பிரெஞ்சு அறிவியலாளர் (பி. 1623)
[தொகு] சிறப்பு நாள்
- ஆப்கானிஸ்தான் - விடுதலை நாள் (1919)

