ஹோ சி மின்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஹோ சி மின் | |
|
வியட்நாம் சனநாயகக் குடியரசின் பிரதமர்
|
|
|---|---|
| பதவியில் 1945 – 1955 |
|
|
|
|
| பதவியில் 1946 – 1969 |
|
| அரசியல் கட்சி | வியட்நாம் தொழிலாளர் கட்சி |
|
|
|
| பிறப்பு | மே 19, 1890 நெ ஆன் மாகாணம், வியட்நாம் |
| இறப்பு | செப்டம்பர் 2, 1969 (அகவை 79) ஹனோய், வியட்நாம் |
| தேசியம் | வியட்நாமியர் |
ஹோ சி மின் (Hồ Chí Minh மே 19, 1890 – செப்டம்பர் 2, 1969) வியட்நாமின் புரட்சித் தலைவராக இருந்தவர், பின்னர் வடக்கு வியட்நாமின் பிரதமராகவும் (1946–1955), அதிபராகவும் (1946–1969) இருந்தவர்.
ஹோ வியட் மின் விடுதலை இயக்கத்தை 1941 இலிருந்து முன்னின்று நடத்தி, 1954 இல் பிரெஞ்சுப் படையினருடன் சண்டையிட்டு வெற்றி பெற்றார். அவ்வெற்றி அவருக்கு கம்யூனிச நாடாக வடக்கு வியட்நாமை அமைக்க உதவியது. வியட்நாம் போரை அவரது இறப்பு வரையில் முன்னின்று நடத்தினார். ஆறு ஆண்டுகளின் பின்னர் வட வியட்நாமின் வெற்றியுடன் போர் முடிவுக்கு வந்ததுடன் இரண்டு வியட்நாம்களும் ஒன்றிணைந்தன. தெற்கு வியட்நாமின் தலைநகராயிருந்த சாய்கோன் (Saigon) நகரம் ஹோவின் நினைவாக ஹோ சி மின் நகரம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.