தந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
A Printing Telegraph Set built by Siemens & Halske in Saint Petersburg, Russia, ca.1900
Cooke and Wheatstone's electric telegraph

தந்தி (Telegraph) எனப்படுவது ஓரிடத்திலிருந்து தொலைவில் உள்ள வேறோர் இடத்திற்கு விரைந்து செய்தியனுப்பப் பயன்படுத்தப்படும் கருவி ஆகும். இக்கருவி மின்காந்த சக்தியின் துணைகொண்டு இயக்கப்படுகிறது. இக்கருவியை 1837 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த மோர்சு என்பவர் கண்டுபிடித்தார். அதனாலேயே இக்கருவியும் அவர் பெயராலேயே 'மோர்சு தந்தி' என அழைக்கப்படுகிறது. தந்திச் செய்தியை அனுப்புவதற்கும் மறு முனையில் பெறுவதற்கும் தனித்தனியே இரு முனைகளில் கருவிகள் உண்டு. தந்திச் செய்தி 'மோர்சு சாவி' எனப்படும் கருவி மூலம் ஒரு முனையிலிருந்து அனுப்பப்படுகிறது. மறுமுனையில் அச்செய்தி 'மோர்சு ஒலிப்பான்' எனும் கருவி மூலம் பெறப்படுகிறது.

பொருளடக்கம்

தந்திக் கருவியின் அமைப்பு [தொகு]

A Morse key

மோர்சு தந்திக் கருவியில், செய்தி அனுப்பும் 'மோர்சு சாவி'க் கருவியில் குத்து வசமாக இயங்கக்கூடிய ஒரு நெம்புகோல் அமைப்பு இருக்கும். இதன் மேற்புறமுள்ள எபனைட் என்னும் குமிழை விரலால் அழுத்தி கீழேயுள்ள பித்தளைக் குமிழைத் தொடுமாறு செய்ய வேண்டும். இக்குமிழ் மின்கலத்தில் உள்ள நேர்முனையுடன் இணைக்கப்பட்டிருக்கும். மின்கலத்தின் எதிர் முனையானது பூமியுடன் இணைக்கப்பட்டிருக்கும். செய்தி பெறும் இடத்திலுள்ள 'மோர்சு ஒலிப்பான்' கருவியில் இருக்கும் மின்காந்தத்தின் மேற்புறத்தில் ஓர் இரும்புச்சட்டம் இருக்கும். இதன் ஒரு முனை மேற்பகுதியில் அமைந்துள்ள இரு பித்தளைத் திருகுகளுக்கு இடையே மேற்புறத் திருகைத் தொட்ட வண்ணம் இருக்கும். மின் காந்தத்துடன் சுற்றப்பட்டுள்ள கம்பிச்சுருளின் மற்றொரு முனை பூமியுடன் இணைக்கப்பட்டுள்ள கம்பியோடு இணைந்திருக்கும். இதுவே தந்திக் கருவியின் அமைப்பு ஆகும்.

செயல்படும் முறை [தொகு]

சாமுவேல் மோர்சுவின் தந்திக் கருவி

தந்திக்கருவியில் அமைக்கப்பட்டுள்ள குமிழ் அழுத்தப்படும் போது மின்சாரம் பாய்கிறது. அதனால் செய்தி பெறும் இடத்தில் உள்ள ஒலிப்பான் காந்த சக்தி பெறுகிறது. அக்காந்த சக்தி இரும்புச் சட்டத்தைக் கீழாக இழுக்கிறது. அதன் விளைவாகச் சட்டத்தின் ஒருமுனைக் கீழாகத் தாழ்ந்து திருகின் மீது மோதி ஒலி எழுப்புகிறது. அப்போது செய்தி அனுப்புபவர் குமிழை அழுத்துவதை விட்டுவிட்டால் மின்சாரம் பாய்வதும் நின்றுவிடும். இதன் மூலம் மின்காந்தம் தன் சக்தியை இழப்பதால் ஓசை எழுப்புவதையும் நிறுத்திவிடும். இதனால் இரும்புச் சட்டம் மீண்டும் மேலெழுந்து திருகின் மேல் மோதி அடுத்தடுத்து ஒலி எழுப்பும். இந்த ஒலிகளின் தன்மைக்கேற்ற ஒலிக்குறியீடுகளை மோர்சு வகுத்தளித்துள்ளார். அவ்வொலிக் குறியீடுகளை எழுத்துகளாக மாற்றுவதன் மூலம் செய்தியை பெறலாம்.

தந்தி முறைகள் [தொகு]

இன்றைய அறிவியல் துறையின் பெருவளர்ச்சியின் விளைவாக பல்வேறு வகைப்பட்ட தந்தி முறைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை:

  • வீடங்டன் முறை
  • பாடட் முறை
  • கிரீடு முறை

என்பவையாகும். டெலி பிரிண்டர் எனப்படும் 'தொலை அச்சடிப்பு முறை' செய்தித் துறையில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. படங்களை உள்ளது உள்ளவாறே நெடுந்தொலைவு 'ஒளிநகல்'(Fax) முறையில் அனுப்பவும் முடிகிறது.

உசாத்துணை [தொகு]

மணவை முஸ்தபா, 'இளையர் அறிவியல் களஞ்சியம்' மணவை பதிப்பகம் வெளியீடு. 1995

"http://ta.wikipedia.org/w/index.php?title=தந்தி&oldid=1368514" இருந்து மீள்விக்கப்பட்டது