புவிநிலைச் சுற்றுப்பாதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புவிநிலைச் சுற்றுப்பாதை - அசைபடம்

புவியின் நிலநடுக்கோட்டுத் தளத்தில் 35,786 km (22,223 மைல்கள் ) குத்துயரத்தில் அமையப் பெற்றிருக்கும் புவியிணக்கச் சுற்றுப்பாதை, புவிநிலைச் சுற்றுப்பாதை (geostationary orbit) எனப்படும். இச்சுற்றுப்பாதையில் செலுத்தப்படும் செயற்கைக்கோள் புவிவானத்தில் ஒரே இடத்தில் இருக்கும்; மேலும் அதன் புவி வரை (ground-track)ஒரு புள்ளி ஆகும். இத்தகைய அமைப்பு தொலைத்தொடர்புத் துணைக்கோள்களுக்கும் வானிலைத் துணைக்கோள்களுக்கும் சிறப்பானது; ஏனெனில், இதன் மூலம் ஒரேயொரு செயற்கைக்கோளின் உதவியுடன் புவியின் ஒரு குறிப்பிட்ட பகுதியை எந்நேரமும் இடம்பட [1](coverage) முடியும்.

[தொகு] வரலாறு

முதன்முதல் புவிநிலைச் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட துணைக்கோள் சின்க்காம் 3. இது 1964-இல் ஏவப்பட்டது; பசிபிக் பெருங்கடலின் மேல் சுற்றுப்பாதையில் இருந்த இத்துணைக்கோள் எடுத்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவில் கண்டுகளிக்கப் பட்டது.

விண்கலம் ஒன்றை புவிநிலைச் சுற்றுப்பாதையில் இருத்தலாம் என்ற கருத்தை முதலில் கூறியவர்கள்: எர்மன் போட்டோக்கினிக் - Herman Potocnik ( எர்மன் நூர்டங் ), கான்சுடன்சுடீன் சியால்க்கோவுசுகி - Konstantin Tsiolkovsky ஆவர். 1945-இல் ஆர்தர் சி. கிளார்க் என்பவர் இவ்வகைச் செயற்கைக்கோள்களின் தொகுதி எவ்வாறு உலகத் தொலைத்தொடர்புக்கு வழிவகுக்கும் என்பதை விரிவாகக் குறிப்பிட்டார்.

[தொகு] புவிநிலைச் செயற்கைக்கோள்

[தொகு] மேற்கோள்கள்

  • daviddarling [2]
    1. தமிழ் அகரமுதலி [1]
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்