இசுப்புட்னிக் 5

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஸ்புட்னிக் 5
இயக்குபவர் சோவியத் ஒன்றியம்
முதன்மை ஒப்பந்தக்காரர் OKB-1
திட்ட வகை புவியியல் அறிவியல்
Satellite of பூமி
Orbits ~16
ஏவப்பட்ட நாள் ஆகஸ்ட் 15, 1960 at 08:44:06 UTC
Landing ஆகஸ்ட் 20, 1960
06:00:00 UTC அண்ணளவு Mission_Duration = 1 நாள்
தே.வி.அ.த.மை எண் 1960-011A
நிறை 4,600 கிகி
Orbital elements
சாய்வு 64.95°
சுற்றுக்காலம் 90.72 நிமிடங்கள்


ஸ்புட்னிக் 5 என்பது சோவியத் ஒன்றியத்தின் விண்வெளித் திட்டத்தின் கீழ் ஏவப்பட்ட ஒரு செய்மதி ஆகும். விலங்குகளை விண்வெளிக்கு ஏற்றிச் சென்று மீண்டும் அவற்றைப் பாதுகாப்பாகத் திருப்பிக் கொண்டுவந்த முதல் விண் ஓடம் இதுவாகும். 1960 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19 ஆம் நாள் ஏவப்பட்ட இக் கலம், அடுத்த 8 மாதங்களிலும் குறைந்த காலப் பகுதிக்குள் மனிதனை ஏற்றிய முதல் புவிச் சுற்றுப்பாதைப் பறப்புக்கு வழி சமைத்தது.

இந்த விண்கலம் பெல்க்கா, ஸ்ட்ரெல்கா என்னும் பெயர் கொண்ட இரண்டு நாய்களையும், 40 சுண்டெலிகளையும், 2 எலிகளையும், பல வகைத் தாவரங்களையும் ஏற்றிச் சென்றது. விண்கலம் அடுத்த நாளே புவிக்குத் திரும்பியது. எல்லா விலங்குகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டன. இவ் விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒளிப்படக்கருவி நாய்களைப் படம் பிடித்தது.

புவியை விண்கலம் அடைந்ததன் பின்னர், ஸ்ட்ரெல்காவின் குட்டிகளுள் ஒன்று அமெரிக்காவின் அப்போதைய முதல் பெண்ணான ஜாக்குலீன் கென்னடிக்கு சோவியத் நாட்டின் பரிசாக அனுப்பப்பட்டது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=இசுப்புட்னிக்_5&oldid=1547901" இருந்து மீள்விக்கப்பட்டது