ஆகஸ்டு 2
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
(ஆகஸ்ட் 2 இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)
ஆகஸ்ட் 2 கிரிகோரியன் ஆண்டின் 214வது நாளாகும். நெட்டாண்டுகளில் 215வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 151 நாட்கள் உள்ளன.
| << | ஆகஸ்ட் 2008 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||
| MMVIII | ||||||
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1790 - ஐக்கிய அமெரிக்காவில் முதற் தடவையாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது.
- 1870 - உலகின் முதலாவது சுரங்க தொடருந்து சேவை லண்டனில் தொடங்கப்பட்டது.
- 1934 - அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் அதிபரானார் (Führer).
- 1980 - இத்தாலியில் தொடருந்து நிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 85 பேர் கொல்லப்பட்டனர்.
- 1989 - யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 63 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
- 1990 - ஈராக் குவைத்தின் மீது படையெடுத்தது.
- 1994 - பலாலி இராணுவத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கியதில் உலங்கு வானூர்தி, கவச வண்டி தாக்கியழிக்கப்பட்டன.
- 2006 - திருகோணமலை மாவட்டத்தில் மகிந்தபுர, கிளிவெட்டி, பாலதோப்பு, பச்சனூர் இராணுவமுகாம்களைத் தாக்கி மூதூர் இராணுவக் கட்டுப் பாட்டுப் பகுதிக்குள் புலிகள் உள்நுளைந்தனர்.
[தொகு] பிறப்புகள்
- 1913 - தனிநாயகம் அடிகளார், உலகத் தமிழாராய்ச்சி மன்றம் அமைக்க அடிகோலியவர் (இ. 1980)
[தொகு] இறப்புகள்
- 1860 - சேர் ஹென்றி வோர்ட் (Sir Henry George Ward), இலங்கையின் முன்னாள் கவர்னர் (பி. 1796)
- 1892 - Dr Bonjean, கொழும்பின் முதலாவது ஆயர்.
- 1922 - அலெக்சாண்டர் கிரஹாம் பெல், தொலைபேசியைக் கண்டுபிடித்தவர் (பி. 1847)
- 1923 - வோரன் ஹார்டிங் (Warren G. Harding), ஐக்கிய அமெரிக்காவின் 29வது குடியரசுத் தலைவர் (பி. 1865)

